Translate

water benefits health

WATER BENEFITS FOR HEALTH:-
நீர் நம்முடைய ‌வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்று நாம் என்ன ஆரோக்கியமான உணவு சாப்பிட்டாலும் நம்முடைய உணவுகளை சக்தியாக மாற்றுவது இந்த நீர் தான் அந்த நீரின் பயன்களை பற்றி பாரப்போம்.

நீரினால் உடலுக்கு ஏற்ப்படும் பயன்கள்:-
1. தினமும் குறைந்தது 3 லிட்டர் நீர் அருந்துவதால் நம் உடலின் சக்தி அதிகரிக்கும்.

2.பல மில்லியன் கழிவுகளை நம் உடலில் இருந்து வெளியேற்றுகிறது.

3.உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஊட்டச்சத்துகளை கொண்டு செல்கிறது.

4.உடலின்‌ வெப்ப நிலையை சீராக வைப்பதற்க்கு நீர் பெரிதும் உதவுகிறது.

5.உடல் எடை குறைய காரணமாக உள்ள metabolism உற்ப்பத்தியை சீராக வைக்கும்.
6.நம்‌ உடலில் ஏற்ப்படும் தசை பிடிப்புகளை நீீங்கும்.

7.குடல் இயக்கம் மற்றும் மலசிக்கல் பிரச்சனைகளை தடுக்கும்.

8.முகம் பொழிவாக இருப்பதற்கு நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

9.நமது மூளையில் 90% நீர் உள்ளது.
போதிய அளவு நீர் நம்முடைய மூளை பகுதியில் இல்லை என்றால் தலைவலி உருவாகும்.

10.உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தண்ணீர் குடிக்கும் முறைகள்:-

*விடியற்காலையில் எழுந்த உடன் தண்ணீர் குடிக்க வேண்டும்.
(உடல் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்)(கழிவுகளை வெளியேற்றும்)

* குளிப்பதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்.
(இதயம் சமந்த பிரச்சனைகள் மாறும்)

* உணவுக்கு 15நிமிடத்திற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்.
(ஜீரண சக்தி அதிகரிக்கும்,உடல் எடை குறையும்).
* தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்.
(மூளை மற்றும் இதயத்திற்கு நல்லது).

* உடற்பயிற்சி செய்வதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டும்.
(உடல் தசைகள் நன்கு செயல்படும்)

*வெளியிடங்கள் செல்லும் போது தண்ணீர் குடிக்க வேண்டும்.
(கிருமி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்).

* தாகம் வரும்போது தண்ணீர் சற்று அதிகமாக குடிக்க வேண்டும்.(தண்ணீரை குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும்)

Herbal water benefits:-

1.சீரகத் தண்ணீர்:

ஜீரண சக்தி,வாய்யு தொல்லை, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.உடலின் வெப்ப நிலையை சமநிலையில் வைக்கிறது.இரத்த சோகை நீங்கும் சீரக தண்ணீரியில் வைட்டமின் A-E இருப்பதால் நம் உடல் எப்போதும் இளமையாக ‌இருக்கும்.
2.ஏலக்காய் தண்ணீர்:- 

வாய் நாற்றம், குமட்டல்,மூச்சு குழாய் பிரச்சனைகள்,இதயம் சம்பந்தமான பிரச்சனைகள்.வயிற்று வலி.ஏலக்காய்‌ தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.மாதவிடாய் சரியாக இருக்கும்.(கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வயிற்றுப்புண் உள்ளவர்கள் ஏலக்காய் தண்ணீரைக் குடிக்க கூடாது)

3.வெந்தய தண்ணீர்:-

உடல் சூட்டை தணிக்கும்,நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது, சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்தும், விந்து உற்பத்தி அதிகரிக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வலி ஒற்றை தலைவலி சரியாகும். இரத்ததில் கொழுப்புகளை கரைக்கிறது.தினமும் வெந்தய‌ தண்ணீர் குடிப்பதால் தாய்பால் உற்பத்தி அதிகமாகும் ஹார்மோன் சுரப்பிகள் சரியாக செயல்படுகிறது.
4.புதினா தண்ணீர்:-

உடலின் நீர்ச்சத்து அதிகமாகும்.ஆஸ்துமா பிரச்சனைகள் சரியாகும்.உடலின் கெட்ட கொழுப்புகளை குறைக்கும்.
எப்போதும் உடலை சுறுசுறுப்பாக வைக்கும்,உடலில் உள்ள கெட்ட வாசனைகளை சரியாகும்.
5.அரிசி கொதிக்க ‌வைத்த தண்ணீர்:-

மலச்சிக்கல்,உடல் வலிமையை அதிகரிக்கும்,தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும், வயிற்றுப்புண் சரியாகும் தொடர்ந்து ஒரு மாதம் அரிசி தண்ணீரை குடித்து வந்தால் உடலின் சர்வ பிரச்சனைகளும் தீரும.

உடலில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்:-

வாய்‌வறட்ச்சி,முகத்தோல் உலர்ந்து போவது,கண் எரிச்சல், எலும்பு பினைப்புகளில் வலி ஏற்படும்,தசைவலி தசைப்பிடிப்பு உண்டாகும்,உடல் சோர்வு அடைதல்
சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படும்.
இறுதி:-
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் செயல்பட காரணமாக இருப்பது தண்ணீராகும்.

நிலத்தடி நீரை குடியுங்கள் சுறுசுறுப்பாக வாழுங்கள்
                                                 தொடரும்......

Post a Comment

0 Comments