Translate

பெண் உரிமை பெண்கள் கேட்பது

ஒரு பெண் பேசுகிறாள் இப்படி:-

பெண்கள் இவ் உலகின் கண்களாக கருதப்படுகின்றனர்.என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம் நாம் பூமியை பூமி தாய் எனவும் கடலை கடல் அன்னை எனவும் அழைக்கும் நாம்। பெண்களின் உரிமையை கொடுக்கிறோமா?
இன்றைய உலகில் கடமை வாய்ந்தவர்களாகவும், மனவலிமையுடைவரே 'ஆண்கள்' என்று இந்த சமுதாயம் கூறுகிறது ஆனால் உண்மையில் ஆண்களை விட பெண்கள் மனவலிமையில் உறுதியானவர்கள் தெரியுமா?

அப்படி இருந்தும் ஏன் பெண் ஆண்களுக்கு சமமான உரிமைகளை
பெற முடிவதில்லை காரணம்?

சில ஆண்கள் பெண்னை காம பொருளாகவும் பெண்ணால் என்ன‌செய்ய முடியும் என்ற ஓர் எண்ணத்தை மனதில் வைத்துள்ளனர்.

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்'

என்கிற வள்ளுவரின் வார்த்தை எத்தனை பேருக்கு தெரியும்.ஆம்! பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒழுக்கம் வேண்டும்.
இன்றைய காலத்தில் பாலியல் வன் கொடுமைகள் மிக மிக அதிக எண்ணிக்கையில் நடந்து கொண்டு வருகிறது.ஆம்....। நம் உலகத்தில் இன்றும் சில நாடுகள் பெண்களை காமபொருளாக விற்பனைசெய்கின்றனர் .ஏன் இந்தியாவில் புனிதமாக இருக்கும் இடங்களிலும் பாலியல் தொல்லைகள் அரங்கேறுகிறது. 

அதுமட்டும் அல்லாது படிக்கும் வயதில் திருமணம் என்றால் என்ன‌ என்பது கூட தெரியாத 18-வயதிற்குக் கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்து வைத்தால் அதை குழந்தை திருமணம்என்கிறோம். 

பெண்களுக்கு எதிராக செய்யப்படும் குற்றங்களை வன்கொடுமை என கூறும் சில நாடுகள்  ஏன் உடனடி தன்டனை கொடுப்பதில்லை.

பெண்களை இந்த உலகம் கவர்ச்சிப் பொருளாக காட்டுவதே பாலியல் தொல்லைகள் நிகழ முதல் காரணம்.

பெண் கேட்கிறாள்:-

ஆண்மகனே உன்னை வலிகளை அனுபவித்து பிறப்பித்தவள் நான்.

என்‌‌ குருதியை குடித்து வளர்ந்தவன் நீ.

உன்னுடன் பிறந்தவள் நான்.

உன் வாரிசுகள் சுமப்பவள் நான்.

ஆனால் ஆண்மகனே நீ மட்டும் ஏன் எங்களை அவமதிக்கிறாய்?

ஆண்களே நீங்கள் மட்டும் தனக்கு மனைவியாக வரும் பெண் கன்னியாக இருக்க வேண்டும் என நினைகிறீர்கள்.ஆனால்‌ நீங்கள் மட்டும் ஏன் அந்த ஒழுக்கதோடு இருக்கவேண்டும் என்று நினைக்க மாட்டிகிறீர்கள் ஏன்?

'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் மாறி,

"அடுப்பூதுவற்கே படிப்பு தேவை என்ற காலமாகி விட்டது.

நம் முன்னோர்கள் காலத்தில் பெண்கள் ஒரு பருவ நிலையை அடைந்து விட்டால் திருமணம் செய்து வைப்பார்கள்.ஆனால் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு செல்ல துவங்கி உள்ளார்கள்.ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?

இரவில் இல்லை பகலில் கூட பெண் தனியாக செல்ல முடிவதில்லை.காரணம்? திருடன்,பயம்,சிறு‌குழந்தைகளை கூட விட்டு வைக்காத பாலியல் கொடுமை.

இப்படி இருக்கும் போது அவள் ‌எப்படி சுதந்திரமாகஇருப்பாள்.
சிந்தியுங்கள்உலகில் உள்ள ஆண்களே!
அனைவரும்‌ பெண்ணின்‌ வயிற்றில்‌ இருந்து தானே வந்தீர்கள்,பிறகு ஏன் பெண்களை தவறான எண்ணத்தில் பார்க்கிறீர்கள் காரணம் வயது‌ கோளாறு,முதியவர்களின் பார்வை‌கோளாறு,கவனசிதறல்,
தவறான சிந்தனை,போதை‌‌ இவை ‌அனைத்தும் முக்கிய காரணம் ஆகும்.

ஆண்களே உங்களின் ஒரு நிமிட ஆசைக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கை,கனவு,இலட்சியம் யாவற்றையும் அழித்து விடுகிறீர்கள்.

பத்து மாதங்கள் உன்னை கருவில் சுமந்து கொண்டு தன் உயிரை பனையம் வைத்து உன்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய அந்த தாயின் அன்பு எட்டுத் திசைகள் தேடினாலும் கிடைக்காது!.............

ஒரு தாயின்‌ அன்பு என்னவென்று புரியும் யாவரும் இதை போல் ஒவ்வொரு பெண்ணையும் தன் உடன்‌பிறவா  சகோதரியாக எண்ணினால் மட்டுமே ஒவ்வொரு  பெண்ணின் சாதனைக்கும் ஆண்கள் துணைநிற்க முடியும்.

ஆண்மகனே பெண்கள் செல்லும் பாதையில் இடையூர்கள் ஏற்படுத்ததே, மாறாக அவள் செல்லும் பாதை சரிதானா' என்றும் அதில் உள்ள இடையூர்களை அகற்றி அவள்ளுக்கு பாதுகாப்பாக இரு. 

பெண் உன்னை மதிக்கிறாள்
அவளுக்கு துனைநில் .

ஒவ்வொரு நாட்டின் வளற்ச்சியும் அந்நாட்டின் பெண்கள் கையில் இருக்கிறது. மறந்துவிடாதீர்.

அதனால் தான் இறைவன் ஆண்மகனை உடலில்‌ பலமாகவும்
பெண்ணை மனதில் பலமாகவும் படைத்தான்.

ஆண்களே பெண்களுக்கு துனை நில்லுங்கள். நல்ல ஒரு சமுதாயம் உருவாகட்டும்...

பெண்கள் நாட்டின் கண்கள் இல்லை இந்த உலகின் தெய்வங்கள்.
     
கமெண்ட் பண்னுங்க..comened it

(தற்பொழுது இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கிறது)

                                                தொடரும்.......

Post a Comment

5 Comments