Translate

herbalife மூலிகை பயன்கள்

மூலிகை தாவரங்கள் மற்றும் பயன்கள்:-
நாம் இன்று சிறிய நோய் வந்தாலும் உடனடியாக மருத்துவமனை சென்று பல மருந்துகளை சரிசெய்கிறோம் 
ஆனால் வரும் முன் காப்பதே சிறந்து என்பது போல இயற்க்கை நமக்கு சில மருத்துவ குணம்உள்ள தாவரங்களை கொடுத்து உள்ளது. 
அவற்றை பற்றி பார்ப்போம்.

மூலிகை தாவரங்கள்:-
1.அருகம்புல்:
வாரம் இரு முறை குடித்தால் இரத்தத்தை சுத்திகரிக்கும்,நரம்பு மண்டலம் பலப்படும்,தோல் அரிப்பு பிரச்சனைகள் குணமாகும்,உடல் கழிவுகளை வெளி யேற்றும்.

2.துளசி:
தினமும் காலை சூடான நீரில் துளசி இலையை குடித்து வந்தால் சளி இருமல் தொல்லை நீங்கும்,இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும், நுரையீரல் பலப்படும்,பக்கவாதம் சரியாகும்.

3.தூதுவளை:
தூதுவளையை நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவடையும், இளைப்பு குணமாகும்,ஆண்மை அதிகரிக்கும்.உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.

4.வல்லாரை:
வல்லாரையை உணவில் சேர்த்து கொண்டால் மன அழுத்தம் குறையும் ஞாபக சக்தி அதிகரிக்கும்,உடல் சூட்டை குறைக்கும்.

5அஸ்வகந்தா:
அஸ்வகந்தா பொடியை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும், இடுப்புவலி,முதுகுவலி,மூட்டுவலி குணமாகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
6.நாவல் விதை:
நாவல் பழத்தின் விதையை பொடியாக்கி தினம் தோறும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்.

7.ஆவாரம் பூ:
ஆவாரம் பூவை உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்
வெள்ளை படுதல் குணமாகும், சிறுநீர் சம்மந்த நோய்கள் குணமாகும் உடல் நாற்றம் நீங்கும்.

8.முடக்குத்தான்:
முடக்குத்தானை உணவில் சேர்த்து கொண்டால் முதுகு வலி பிரச்சனைகள் நீங்கும்,இரத்த ஓட்டத்தை தூண்டும்,மூட்டு பிரச்சனைகள் சரியாகும்.

9.கண்டங்கத்திரி:-
கண்டங்கத்திரியை உணவில் சேர்த்து கொண்டால் இளைப்பு ஆஸ்துமா,தலைவலி,சிறுநீர் பிரச்சனைகள் குணமாகும்.

10.மாதுளை தோல்:
மாதுளை பழத்தின்‌ தோலை சூடான நீரில் கலநது குடித்து வந்தால் வயிற்று போக்கு,சீதபேதி,மூல நோய் குணமாகும்.
11.சுக்கு:
சுக்கு கலந்த உணவுகள் சாப்பிடுவதால் பசியைத் தூண்டும்,ஜீரன சக்தி அதிகரிக்கும்,மார்பு எரிச்சல் குறையும்,மூச்சு வாங்குதல் நீங்கும் பித்தம் தணிக்கும்.

12.அதிமதுரம்:
அதிமதுரத்தை பொடியாக்கி சூடான நீரில் இரவு உணவுக்கு பின் குடித்து வந்தால் நுரையிரல் சளி, தொண்டைபுண்,குடல் புண் மலச்சிக்கல்‌ குணமாகும்.

13.கருஞ்சிரகம்:
கருஞ்சிரகத்தை உடலில் சேர்த்து கொண்டால் தலைவலி,பல்வலி, மூக்கு ஒழுகுதல்,மற்றும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கும் திறனை அதிகரிக்கும்.

14.ரோஜா:
ரோஜா இதழ்களை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண்,உடல் குளிர்ச்சியை தூண்டும், பசியின்மையை போக்கும்.

15.செம்பருத்தி:
காலையில் செம்பருத்தி இலையை சூடான‌நீரில் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும் இதயம் பலப்படும்,நீர் எரிச்சல்,நீர் கடுப்பு போகும்,தலை முடி நன்கு வளரும்.
16.நெல்லிக்காய்:
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி,பார்வை திறன்,இரத்த உற்பத்தி,வாந்தி, மயக்கம்,தலைசுற்று, பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு.

17.வெந்தயம்:
வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடல் சூடு குறையும்,கை,கால் எரிச்சல்,வயிற்று கோளறுகள், சர்க்கரை நோய் குணமாகும்.

18.கருவேப்பிலை:
கருவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தை சுத்தப்படுத்தும் முடி நன்கு வளரும்.
இரும்பு சத்து அதிகரிக்கும்.

19.கீழாநெல்லி:
கீழா நெல்லி மஞ்சல் காமாலை இரத்தசோகை,கண்குறைபாடுகள், கல்லீரல்,மண்னீரல் வீக்கம் குறையும்
நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும்.

20.சிறியா நங்கை:
அரிப்பு தோல் நோய்கள் குணமாகும்
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மூலிகை.பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
இவை அனைத்தும் இயற்கை நமக்கு தந்த சிறந்த மூலிகைகள் ஆகும்.இந்த மூலிகைகளை நாம் தினமும் சிறிதளவு எடுத்துவர நம் உடலில் உள்ள நோய் எதிர்பு சக்தி மண்டலம் பலப்படும்.

இயற்கை மருந்துகளைப் பயன்படுத்துவீர் நலமுடன் வாழுங்கள்.

           இயற்கை மூலிகைகள்       
                                                தொடரும்.......




Post a Comment

2 Comments