Translate

Ulcer அல்சர்‌ குடல் புண்

வயிற்று குடல் புண்:-
அல்சர் எனப்படும் வயிற்று குடல் புண் நோயால் பலர் துன்பபடுகின்றனர்.இந்த குடல் புண் வருவதற்க்கான காரணங்கள் பற்றி பார்ப்போம்.

அல்சர்(குடல்புண்) காரணங்கள்:-
 நம் வயிற்றில் இருக்கும்பாக்டீரியா.
வலி மருந்துகள் மற்றும் புகைபழக்கம்,மது அருந்துவது,டீ,காபி
அதிகமாக குடிப்பது,மன அழுத்தம் என நீருபிக்கபட்டுள்ளது.
ஆனால் கடந்த 40ஆண்டுகள் முன்பு வரை அதிகமான கார உணவுகள் தான் அல்சர் ஏற்பட காரணம் என கூறிவுள்ளனர்.ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த barrv marshall மற்றும் Robin Warren  ஆகிய இரண்டு பேரும் அல்சர் நோயாளிகளை ஆராய்ச்சி செய்த போது அவர்கள் வயிற்றில் உள்ள H-பைலரோ என்னும் பாக்டீரீீீயாவே இதற்க்கு காரணம் என நம்பினார்கள்.ஆனால் இவர்கள் கூற்றை மருத்துவ உலகம் ஏற்று கொள்ளவில்லை.
அதை மருத்துவ உலகிற்கு புரியவைக்க நினைத்த மருத்துவர் Barrv Marshallஎன்பவர் ஒரு நோயாலியின் வயிற்றில் எடுத்த H-பைலரோ நிரம்பிய திரவத்தை தானே உட்கொண்டு 15 நாட்கள் கழித்து தனக்கே வரவழைத்துக்கொண்டு (ulcer)வாந்தி,வயிற்றுவலி,இரத்த கசிவு போன்ற தொந்தரவுகளை வரவைத்து கொண்டார்.பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் H-பைலரோ பாக்டீரியா அவரது இரைப்பையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அது தான் அல்சர் புண்களுக்கு காரணம் என கூறினார்கள்.
அதன் பின் சில ஆண்டுகள் ஆராய்ச்சிகளின் விளைவாக Barrv Marshall மற்றும் Robin Warren கூறியது உண்மை என்று நிருபிக்கப்பட்டதால் 
2005ம் ஆண்டு இதே மருத்துவ உலகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுத்து பெருமைபடுத்தியது.

அல்சர்(குடல்புண்) அறிகுறிகள்:-
*மேல் வயிற்று பகுதியில் அதிக வலி மற்றும் எரிச்சல்.

*வாந்தி வயிறுஉப்சம் வயிறுமந்த நிலை.ஜீரனகோளாறுகள்.

*குறைந்த உணவு உண்ட பின் போதும் என்ற நிலை.

*நெஞ்சுஎரிச்சல்,இரத்தசோகை,உடல் எடை குறைதல்,உணவு விழுங்குவதில்சிரமம் ஆகும்.

அல்சர் பாதிப்புகள்:-

* அல்சர்‌ பகுதியில் ஏற்படகூடிய இரத்த கசிவு ஏற்ப்பட்டு வாந்தி மூலமாகவோ அல்லது மலம் மூலமாவோ வெளியேறுதல்.

*அதிகபடியான அல்சர் குடலை அரித்து அதிகபடியான வயிற்று வலி வருதல்.

*அதிகபடியான நாட்கள் அல்சர் பாதிப்புகளால் குடல் அடைப்பு ஏற்ப்பட்டு வயிறு வீீங்குதல்.

அல்சர்‌ இருப்பவர்கள் சாப்பிட கூடிய உணவுகள்:-
*உணவில் பூண்டு சேர்ப்பதால் வயிற்று புண்களை சரிசெய்யும்.

*காலையில் உணவுக்கு முன் ஆப்பிள் சாப்பிடுவதால் அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாகளை எதிர்த்து போராடும்.

*அல்சர் உள்ளவர்கள் தயிர் உணவு  எடுக்கலாம். தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாகள் கெட்ட பாக்டீரியாகளை எதிர்த்து போராடும்.

*தினமும் உணவு அருந்துவதற்க்கு முன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் குடிப்பதால் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் ஆறும்.

*காலை உணவுகளில் பிரண்டை உணவுகளை சேர்த்து சாப்பிட்டுவர அல்சர் குணமாகும்.

*முட்டை கோஸ்,காலிஃப்பிளவர், கேரட் ஆகியவற்றை உணவில்  சேர்த்துவர அல்சர் விரைவில் சரியாகும்.

*கற்றாழை நீீீர் அருந்துவதால் அல்சர் வேகமாக குணமாகும்.

இவற்றை நடைமுறை படுத்தினால் அல்சர் நோயை விரட்டலாம்.

அல்சர் உள்ளவர்கள் எடுக்க கூடாத உணவுகள்:-
*அல்சர் உள்ளவர்கள் அதிக படியான கார உணவுகளை இரவு நேரங்களில் உண்ண கூடாது.

*பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ண கூடாது.

* அல்சர் உள்ளவர்கள் இறைச்சி உணவுகளை சில நாட்கள் எடுக்க கூடாது.

*குளிர்பானங்கள் மற்றும் மது அருந்துதல் கூடாது.

*அல்சர் உள்ளவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது.

இவைகளை எல்லாம் அல்சர் நோய் உள்ளவர்கள் சில காலம் கடைபிடித்தால் அல்சர் குணமாகும்.

இயற்க்கை உணவுகளை உண்ணுங்கள் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழுங்கள்.
நோய் இல்லாமல் வாழ்க்கை 
                                         தொடரட்டும்.......


Post a Comment

2 Comments