இந்த நவீன காலத்தில் மனிதன் நல்ல உணவு பொருட்களை விரும்புகிறான்.ஆனால் அதிக உணவு பொருள்களில் சுவைக்காக மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு சில அமிலங்கள் கலக்கப்படுகின்றன.
அவ்வாறு கலக்கப்பட்ட சில பொருட்களை கண்டுபிடித்த நாடுகள் அவற்றை தடை செய்து உள்ளன.
அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்:-
1.பதபடுத்தப்பட்ட கோழி இறைச்சி
ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து நாடுகளில் கோழி இறைச்சியை குளோரினை வைத்து பதப்படுத்தி விற்பதற்க்கு 1997ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.அதன் பின் 2010ம் ஆண்டு ரஷ்யாவும் இதை தடைசெய்தது.
காரணம்:-
குளோரினை வைத்து கோழி இறைச்சி பதப்படுத்துவதால் salmonella எனப்படும் பாக்டீரீயா மனிதர்களுக்கு ஆபத்தாக மாறும் என்பதால் தடை செய்துள்ளனர்.
2.தானியங்கள் பார்கள்(cereal bars):
Nuts, chocolate,otts இந்த ஆரோக்கியமான உணவு பொருட்கள் கலந்த(cereal bars)யை ஆனால் டென்மார்க் அரசு இந்த உணவு பொருள்களை 2004ம் வருடம் முதல் தடை செய்துள்ளனர்.
காரணம்:-
அதிக அளவு நச்சுத்தன்மை இருப்பதால் இதை குழந்தைகள் சாப்பிடும் போது கல்லீரல் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
3.farmed salmon பண்ணை வளர்ப்பு சால்மன்:-
பண்ணை வளர்ப்பு சால்மன் மீன்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
காரணம்:-
சால்மன் மீன்களில் அதிக அளவு ஒமேகா இருப்பதால் மக்கள் விரும்பி உண்ன்றனர்.ஆனால் இந்த பண்ணை வளர்ப்பு சால்மன் மீீீன்களுக்கு சில தானியங்களையும் சில antibiotics மருந்துகளையும் பின் மீனின் தசை நிறங்களை மாற்றுவதற்கு சில இரசாயனங்களும் பயன் படுத்துவதக கூறுகின்றனர்.
4.soy sauce சோயா சாஸ்
ரஷ்யா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த soy sauce களை தடைசெய்து உள்ளனர்.
காரணம்:-
இந்த சோயா சாஸ்களில் அதிகப்படியான ethyl carbamate மற்றும் carcinogen என்கிற ஆபத்தான நச்சு பொருள்களும் உள்ளன இது மனிதனின் மூளை நரம்புகளை பாதிக்கும் என கூறுகின்றனர்.
5.இறைச்சி
உலகில் 150 நாடுகள் rectopamine எனப்படும் ஊசி மருந்து செலுத்தி வளர்க்கப்படும் இறைச்சிகளை தடைசெய்து உள்ளனர்.
காரணம்:-
இந்த rectopamine செலுத்தப்படும் இறைச்சியை உண்பதால் இதய நோய் மற்றும் பெண்கள் விரைவாக பருவம் அடைதல் கர்ப்பப்பையில் கட்டி போன்ற பிரச்சனைகள் வருவதாக கூறுகின்றனர்.
6.chips(olestra)
Chips அனைவருக்கும் பிடித்த உணவு
ஆனால் இந்த chipsகளில் olestra அதிக அளவு இருப்பதால் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்து உள்ளனர்.
காரணம்:
Olestra இருக்கும் chips அதிக அளவு உண்ணும் போது வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் வருகிறது என கூறுகின்றனர்.
7.apple ஆப்பிள்:-
அமெரிக்க விவசாயத்துறை 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி -யில் உலகில் உள்ள 80% ஆப்பிள்களில் கெடாமல் இருப்பதற்கு diphenylamine எனப்படும் இரசாயனம் கலந்து விற்பதாக கூறுகின்றனர்.இதனால் ஐரோப்பிய நாடுகளில் ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டனர்.
காரணம்:
இந்த diphenylamine புற்றுநோயை உண்டாக்கும் தன்மை உள்ளது என்று கூறுகின்றனர்.
8.மெல்லும் கோந்து chewing gum
Chewing gum களில் அதிக இனிப்பு சுவைக்காக sugarக்கு மாற்றாக sweetener எனப்படும் ஒருவித ரசாயனங்களை சேர்கின்றனர் மேலும் BHA,BHT எனப்படும் ரசாயனங்கள் இருப்பதால் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை செய்து உள்ளனர்.
காரணம்:-
இந்த BHA,BHT ரசாயனங்கள் வாய் புற்றுநோய் ஏற்ப்பட காரணமாக உள்ளதாக கூறுகின்றனர்.
9.ரொட்டி BREAD
BREAD மெதுவாக இருப்பதற்க்காக potassium bromate எனப்படும் ரசாயனங்களை சேர்கின்றனர். இதனால் பிரேசில், ரஷ்யா,சீனா, ஐரோப்பிய நாடுகள் இந்த வகை breadகளை தடை செய்துள்ளனர்.
காரணம்:-
இந்த வகை breadகளை உண்பதால் சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
10.பச்சை பால் RAW MILK
மாடுகளில் இருந்து எடுக்கப்படும் பாலில் சில கெட்ட பாக்டீரியாகள் இருப்பதால் கலப்படமற்ற பாலை அமெரிக்கா தடை செய்து உள்ளது.
காரணம்:-
இந்த பாலை குடிப்பதால் கடுமையான வயிற்றுவலி ஏன் உயிர் போகும் நிலை கூட ஏற்படலாம் என கூறுகின்றனர்.
இந்த உணவு பொருள்களை பயன்படுத்துவதை குறைத்து கொள்ளுங்கள் இவை அனைத்தும் நம் உடலுக்கு முற்றிலும் கேடு.
கலப்படமற்ற உணவு பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள்.
புதிய தகவல்களுடன் தொடரும்.......
2 Comments
Super information
ReplyDeleteSuper information
ReplyDelete