Translate

Unexpected help

எதிர்பாராத ஓர்‌ உதவி:-

அரபு நாட்டில் நடந்த ஓர் ‌உண்மை நிகழ்ச்சி.
ஒரு தாய் வறுமை காரணமாக தன்னிடம் சேதம் அடைந்த ஒரு தங்க நகையை விற்க வேண்டி ஒரு தங்க வணிகத்துக்கு சென்றார்.

அங்கு சென்று அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் இந்த சேதம் அடைந்த நகையை வைத்து கொண்டு இதன் மதிப்பளவில் பணம் கொடங்கள் என்று கூறினாள் அந்த பெண்.

உடனே அந்த முதலாளி அந்த நகையை வாங்கி சோதித்து இந்த நகை சேதம் அடைந்துள்ளது என்பதால் நீங்கள் இதை விற்கிறார்களா? என்று கேட்டார்.

உடனே அந்த பெண் இல்லை என்னிடம் பணம் இல்லை தற்பொழுது சமாளிக்கவும் குழந்தைகளுக்கு உணவு வாங்கவும் இதை நிற்கிறேன் என்று கூறினாள்.

உடனே அந்த முதலாளி இது பழைய வகையாக உள்ளது உங்களுக்கு இதை யார்‌ கொடுத்தார்கள் என்று கேட்டார்.

அந்த பெண் இந்த நகை என் தாய் எனக்கு ஆசையாக கொடுத்த நகை என்று கூறினாள்.மேலும் சேதத்தை கழித்து கொண்டு பணம் கொடுங்கள் என்று கூறினாள் அந்த பெண்.

அந்த முதலாளி பெண்ணிடம் எவ்வளவு பணம் உங்களுக்கு தேவை என்று கேட்டார்.அதற்கு அந்த பெண் நகை மதிப்பளவு‌ கொடுங்கள் என்றாள். இப்பணத்தை வைத்து தான் நான் குழந்தைக்கு பால் உணவு வாடகை போன்றவற்றை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினாள்.என்னுடை வறுமைக்காக இதை விற்கிறேன் என்றும் கூறினாள்.

சரி என்று அந்த முதலாளி அந்த நகை மதிப்பது பணத்தை கொடுத்து அந்த பெண்ணிடம் நகையையும் கொடுத்தார்.அந்த பெண் சற்று திகைத்தாள் ஏன் நகையை திருப்பி கொடுத்தீர்கள் என்று கேட்டாள்.
அதற்கு அந்த முதலாளி இந்த நகை உங்களுடைய தாய் உங்களுக்கு ஆசையாக கொடுத்தது நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் இந்த பணத்தை என்னுடைய உதவியாக ஏற்று கொள்ளுங்கள் என்று மகிழ்ச்சியாக கூறினார்.

இறுதியாக அந்த தாய் ‌நன்றி‌ தெரிவித்து விட்டு ஆனந்த கண்ணீரோடு அங்கு இருந்து சென்றால்.

கருத்து:-

உதவி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையினை உயர்த்தும். அவனுக்கு நம்பிக்கை அளிக்கும் நாம் பிறருக்கு உதவுவது மூலம் நம்முடைய மன அழுத்தம் குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.வெறும் கடவுளை‌ வணங்குவது மட்டும் புண்ணியங்கள் அல்ல 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பீர்கள்' என்கிறது மறைநூல்கள்.நீங்கள் இந்த பூமியில் இருந்து போகும் போது எதை கொண்டு போகபோறது‌ இல்லை.வாழும் காலங்களில் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் உங்கள் தலைமுறை செழிக்கும்.
ஒரு‌ மனிதனுக்கு உதவும் போது அந்த மனிதனுக்கு நீங்கள் கடவுளாக‌ தெரிவிர்கள்.
"அன்பின்‌‌ பாதை சேர்ந்தவனுக்கு முடிவு என்பதே இல்லை"உன் மனதின் ‌நீளம் எதுவோ அதுவே உன்‌ வாழ்வின் நீளம் என்பதை மறவாதே".

உதவுங்கள் உங்கள் வாழ்க்கை நீட்டப்படும்.
                                                தொடரும்......



Post a Comment

1 Comments