இந்த பூமியில் வாழும் மனிதனை தவிர எந்த உயிரினமும் செய்யாத ஒரு கோழைத்தமான செயல் தான் இந்த தற்கொலை.
தன்னை தானே வருத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் மனிதன் ஏன் அந்த தற்கொலையை புறக்கணிக்க முடியவில்லை.
தற்கொலை சிந்தனை:-
தற்கொலை எண்ணங்கள் வருவதாக கூறப்படும் காரணங்கள் வாழ்க்கை தோல்வி,பிரிவு,தனிமை,காதல் தோல்வி,என கூறுகிறார்கள்.
இன்னொரு பக்கம் இனையதள விளையாட்டு,போதை,ஏமாற்றம்,கடன் தொல்லை என கூறுகிறார்கள்.
ஆனால் இறுதியில் அனைத்தும் மனஅழுத்ததில் கொண்டு முடிவடைவதால் மனிதன் தற்கொலை தான் முடிவு என்று தவறான பாதையை எடுக்கிறான்.
தற்கொலைக்கு-முன்-பின்:-
தற்கொலை செய்யும் மனிதன் தன் குடும்பத்தை பற்றி சிந்திப்பது இல்லை.அவன் தற்கொலை செய்தபின் மிகவும் பாதிக்கப்படுவது அவன் குடும்பம் மட்டுமே.
ஆம்! தற்கொலைக்கு முன் என்ன துன்பங்கள் வந்தாலும் தன் மகன் பார்த்து கொள்வான் தந்தை பார்த்து கொள்வார் கணவன் பார்த்து கொள்வார் என நம்பிக்கையுடன் இருக்கும் குடும்பம் தற்கொலைக்கு பின் அவர்களின் நம்பிக்கை வீணாகிவிடுகிறது.
தற்கொலை எண்ணம் வருகிறதா உன் குடும்பத்தை சிந்தித்து பார் உன் மனைவி,காதலி,குழந்தைகள், பெற்றோர்களை சற்று சிந்தித்து பார்.
காதல் தோல்வியா கலக்கம் கொள்ளாதே (உண்மை காதல் தோற்பது இல்லை)அது பொய்யாக இருந்தால் காதலை வீசிவிட்டு உன்னை ஏமாற்றியவர் முன் வாழ்ந்து காட்டு.
கடன்தொல்லையா உன் உழைப்பை கொஞ்சம் சேமித்து பார் கடன்தொல்லை உன்னைவிட்டு விலகும்.
(உன்னிடம் இருப்பதை வைத்து வாழ் தேவையில்லாமல் யாரிடமும் கடன் வாங்காதே)
சேமிப்பதை பற்றி யோசி தற்கொலையை பற்றி யோசிக்காதே.
ஏமாற்றம் வேலையின்மை போன்ற காரணங்களால் இளைஞர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்வதாக கூறுகின்றனர்.தற்கொலைக்கு முயற்சி செய்யும் நீ அதே முயற்சியை உன் வாழ்க்கையில் செயல்படுத்து.
அடுத்த முயற்சியை பற்றி யோசி மாறாக இதோடு வாழ்க்கை முடிந்து விட்டது என்று யோசிக்காதே.
அற்ப இனையதள விளையாட்டுக்காக உன் வாழ்க்கையை முடித்து விடதே அதில் நீ செலவழிக்கும் நேரங்களை நல்ல காரணங்களுக்கு பயன்படுத்து. உன்னை அடிமையாக்கும் எந்த ஒரு செயலையும் செய்யாதே.
விளையாட்டில் தோற்றால் உன் வாழ்க்கையே தோற்று விடுமா?என்று சிந்தித்து பார்.
இறப்பு நம் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வெற்றியடையும் ஆனால் தினமும் நாம் இறப்பை தோற்க்கடிகிறோம் என்பதை மறந்து விடதே.
தற்கொலை எண்ணங்களை மாற்றுவது எப்படி:-
*அதிக நேரம் தனிமையில் இருக்காதே.
*கோபம்,அழுகை,அடக்கி கொள்ளாதே.மனதிற்குள் வைக்காதே.
*தற்கொலை எண்ணம் வரும்போது சிறிது நேரம் கண்களை மூடி இதுவும் கடந்துபோகும் என்று மனதிற்குள் நினைத்து கொள்.
*தற்கொலை எண்ணங்கள் வரும்போது சிறிது தூரம் பயணம் செய்யுங்கள்.
*தனிமையில் இருக்க விரும்பாதீர்கள் தனிமை நம்மை சில நேரங்களில் தவறான வழியில் இட்டு செல்லும்.
இவை அனைத்தும் தற்கொலை எண்ணங்கள் வருதை தடுக்கும்.
கடந்த சில வருடங்களாக உலகில் காரணம் இல்லாத தற்கொலைகள் அதிகரித்து உள்ளன.
தற்கொலை எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு அல்ல மாறாக புதிய பிரச்சனைகள் தான் உருவாகும்.
இந்த பூமியில் வாழ்வது ஒரு மட்டுமே அதில் இன்பம் துன்பம் என எது வந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுகொள்ளுங்கள்.
பொறுமையாக இருங்கள் எல்லா நாட்களும் நாம் தோல்வி அடைய மாட்டோம் ஒருநாள் வெற்றி அடைவோம்.
இறுதி:-
தற்கொலை எண்ணங்கள் அகற்றி இந்த பூமியில் எது வந்தாலும் துணிச்சலுடன் வாழ்ந்து காட்டுவோம் என்று மகிழ்ச்சி உடன் எல்லா நாட்களையும் தொடங்குகள்.
ஒரு நாள் நம்முடைய துன்பங்கள் மறைந்து என்பதை மறவாதீர்.
......மகிழ்ச்சியுடன் தொடரட்டும்........
3 Comments
👍👍👍👍👍
ReplyDeleteSucide is not for solution
DeleteGood motivation
ReplyDelete