சிறுநீரகம் மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிக முக்கிய வேலைகளை செய்யும் சிறுநீரிம் பற்றி பார்ப்போம்.
சிறுநீரகம் செயல்பாடு:-
சிறுநீரகம் இரத்ததில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், இரத்ததில் உள்ள சிகப்பு அணுக்கள் உற்பத்தியை தூண்டுதல்,உடலை சமநிலையில் வைத்திருத்தல்,இரத்த அழுத்ததை பரமாரிக்கும் வேலைகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.
சிறுநீரக பிரச்சனைகள்:-
சிறுநீரகவீக்கம்,சிறுநீரககல் சிறுநீரக செயல்பாடு குறைவு போன்ற பிரச்சனைகள் சிறுநீரகத்தை பாதிக்கிறது.
சிறுநீரக பிரச்சனைகள் ஏற்ப்பட காரணம்:-
வலி மாத்திரைகளை அதிகம் பயன் படுத்துதல் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி கொள்வது
குறைந்த அளவு நீர் அருந்துதல்
துரித உணவுகள் மற்றும் அதிக நிறமிகள் கலந்த உணவுகளை உண்பது.செயற்க்கை முறையில் செய்யப்படட குளிர் பானங்கள் அருந்துதல்.
உடற்பயிற்ச்சி செய்யாமல் இருப்பது.
இவை அனைத்தும் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்க கூடிய காரணங்கள் ஆகும்.
சிறுநீரக தகவல்கள்:-
*சிறுநீரகம் நாம் பயன்படுத்தும் அலைபேசியை விட சிறியது.
*சிறுநீரகம் உங்கள் உடலில் திரவ அளவை கட்டுப்படுத்துகிறது.
*சிறுநீரகம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
*சிறுநீரகம் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்கிறது.
*ஒவ்வொரு நாளும் நம்முடைய சிறுநீரகம் 40% இரத்ததை சுத்திகரிக்கிறது.
*ஒரு நாளைக்கு 400 முறை சிறுநீரகம் இரத்ததை சுத்திகரிக்கிறது.
*உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று செயல் இழந்து விட்டால் உடனடியாக மற்றொன்று தன் வேலைகளை இரடிப்பு செய்கிறது.
*ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் ஒருவர் சிறுநீரக மாற்று பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.
*ஒவ்வொரு நாளும் 13 பேர் சிறுநீரகத்திற்காக காத்திருக்கிறார்கள்.
சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள்:-
* திடிரென அதிக உடல் எடையிழப்பு .
(சிறுநீரம் பாதிக்கப்பட்டால் உடலில் உள்ள புரத சத்து வெளியேறிவிடும்)
* சுவையின்மை,பசியின்மை,வாய் துர்நாற்றம்( சுவசிக்கும் சிறு நீர் வாடை வரும்.)
* இரத்த சோகை(சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இரத்த சிகப்பு அணுக்களை உண்டாக்கும் ஒருவித ஹார்மோன் அளவு உற்ப்பத்தி குறைவதால் இரத்த சோகை ஏற்ப்படும்).
* தோலில் அதிகபடியான அரிப்பு காந்தல் (சிறுநீரகம் பாதிப்புக்கு பின்னர் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறமல் இருப்பதால் இந்த அறிகுறிகள் ஏற்ப்படும்).
* முதுகு வலி உடல் வீக்கம் சிறுநீரம் இருக்கும் இடத்தில் அதிக வலி கண் வீக்கம்.(உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
* சிறுநீர் அதிகம் அல்லது குறைவாக வெளியேறுதல்,சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறுதல்.
இதில் உள்ள அறிகுறிகளில் மூன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
சிறுநீரகத்திற்கு ஏற்ற உணவுகள்:-
*பூண்டு தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொண்டால் சிறுநீரக குழாய்களில் ஏற்பட கூடிய தொற்றுகளை எதிர்த்து போராடி அழிக்கும் தன்மை பூண்டிற்க்கு உண்டு.
*கொத்தமல்லி இலை சிறுநீரக கழிவுகளை வெளியேற்றுவதில் மிகவும் உதவி புரிகிறது (கொத்தமல்லி இலையை சூடான நீீரில் சேர்த்து குடித்து வர சிறுநீரகம் நன்கு பலப்படும்.)
*திராட்சையில் வைட்டமின் C. உள்ளதால் சிறுநீரக கற்க்கள் ஏற்ப்படமல் தடுக்கிறது.
*இஞ்சி சிறுநீரக இரத்தகுழாய்களை பரமாரிக்கிறது.
*முட்டை கோஸ்யில் வைட்டமின் C,B12,B6 இருப்பதால் சிறுநீரக நீீீர்க்கட்டிகள் வராமல் தடுக்கிறது.
*கடல் மீீன்களில் OMEGA3 இருப்பதால் சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்ப்படாமல் பாதுகாக்கிறது.(சுரை,மத்தி மீன்கள் மிகவும் நல்லது).
*சிறிய வெங்காயம் உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் சிறுநீரக கல் வராமல் தடுக்கும்.
இந்த உணவுகள் சிறுநீரகத்தை பாதுகாக்கும் முக்கிய உணவுகள் ஆகும்.
இறுதி:-
சிறுநீரகம் மிகவும் முக்கிய உறுப்பு அதை பாதிக்காதபடி பார்த்து கொள்ளுங்கள்.
(மது அருந்துவதால் எவ்வித அறிகுறியும் இன்றி சிறுநீரகம் பாதிக்கப்படும்).
(மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்தவித மாத்திரைகளையும் எடுக்க வேண்டாம்).
நல்ல உணவுகளை உண்ணுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.
தொடரும்.......
1 Comments
Super use full
ReplyDelete