Translate

mariana trench மரியானா ஆழி

மரியானா ஆழி மர்மம்:-

பூமியின் கடல் பகுதியில் பல மர்மங்கள் உள்ளன.ஏன்? இன்று வரை கடலில் வாழும் உயிரினங்களில்  மனிதன் வெறும் 1% மட்டுமே கண்டுபிடித்துள்ளார்கள் என்பதே உண்மை.
அதில் ஒன்று தான் இந்த மரியானா ஆழி பகுதி.

மரியானா ஆழி எங்கே:-
வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா தீவுகளுக்கு தெற்க்கிலும்.
கிழக்கில் குவாமுக்கு அருகில் உள்ள ஆழமானா பகுதியே இந்த மரியானா ஆழி.புவி மேலோட்டில் உள்ள மிகவும் தாழ்வான பகுதியும் இதுவே.

மரியானா ஆழி உலகிற்க்கு அறிமுகம்:-

கடல் வழி பயணத்தால் உலகயே சுற்றி வந்த மனிதன் உலக வரைபடத்தை உருவாக்கிய பிறகு
கி.பி.1871களின் தொடக்கத்தில் கடலையும் அதன் ஆழத்தையும் கணக்கிட முடிவு செய்து 1872 ல் ஆரம்பிக்கப்பட்டது தான் H.M.S CHALANGER என்ற பயணம்.

இந்த பயணத்தில் ஈடுபட்ட குழுவானது 4 வருடங்களாக 70ஆயிரம் மைல்கள் சுற்றி வந்த இந்த கப்பல் கடல் ஆழத்தையும் பல குறிப்புகளையும் கண்டறிந்து பின் மேற்க்கு பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியின் ஆழத்தை ஆழவிடும் போது தான் ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்து உள்ளது.

Sounding lines என்ற கருவியை கயிறு மூலம் கடலில் அனுப்பி தான்    அப்பொழுது ஆழத்தை கணக்கிட்டு உள்ளனர்.

அப்பொழுது தான் மேற்க்கு பசிபிப் கடலின் ஒரு பகுதில் ஆராயும் போது தான் மொத்தம் 249மைல்கள் நீளம் கொண்ட கயிறானது இதுவரையிலும் அவர்கள் அளந்த அதிகபட்ச ஆழத்தையும் தாண்டி சென்றுள்ளது.அப்பொழுது அவர்களால் பதிவு செய்யப்பட்ட 5மைல் தான் உலகிலேயே கண்டுபிடிக்கப்பட்ட மிக ஆழாமான‌ பகுதியாக கணக்கிடப்பட்டு உலகிற்க்கு முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் அந்த காலங்களில் நவீன தொழில்நுட்பங்கள் இல்லாததால் அந்த ஆழாமான பகுதியில் சென்று ஆராய்ச்சி செய்ய முடியவில்லை.

ஆனால் 75 வருடங்கள் கழித்து நவீீன
கருவிகளான சோனார் கருவியை கொண்டு H.M.S CHALANGER   ஆராய்ந்த அதே பகுதியை மறுபடியும் சோனார் கருவியை கொண்டு ஆராய்ச்சி செய்யும் போது பல புதிய தகவல்களை சோனார் கருவி அளித்தது.

அது 5மைல் ஆழம் இல்லை என்றும் 
7மைல் ஆழாத்தையும் 1585மைல் நீீீீளமும் 43மைல் அளவிற்க்கு அகலம்  கொண்டது எனவும் இந்த ஆச்சரியம் மிக்க தகவல் உலகிற்கு அறிமுகமானது.

மரியானா ஆழியும் மனிதனும்:- 

இந்த பகுதியில் சென்று ஆராய்ச்சி செய்ய ‌ஆரம்பித்தான் ஆனால் அது எளிமையான செயல் அல்ல காரணம் இந்த ஆழாமான பகுதியில் 8டன் அளவிலான அதிக அழுத்தம் உள்ளதாலும் சூரிய வெளிச்சம் உட்புறமுடியாத பல சிக்கல்கள் இருந்தன.

1953ம் வருடம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆகஸ் ஃபிக்கர்ட் என்ற நீர்மூழ்கி பொறியாளர் முன்னெடுத்த முயற்ச்சியால் ட்ரையஸ்ட் என்று அழைக்க கூடிய சக்தி வாந்த நீீீர்மூழ்கி கப்பலை உருவாக்கி 7 வருடங்கள் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தினர்.
பின் 1960 ஜனவரி மாதம் இந்த நீீீர்மூழ்கி கப்பலை வடிவமைத்த ஆகஸ் ஃபிக்கர்ட் மற்றும் அமெரிக்க கடற்படை‌ லெப்டினன்ட் டான் வாஸ் என்ற இருவருவர் மட்டுமே இந்த ஆபத்தான கடல் ஆழ பயணத்தை தொடங்கினர்.

2மணிநேர பயணத்திற்க்கு பின் சரியாக 18ஆயிரம் அடி ஆழத்தில் அந்த விபபரீதம் நிகழ்ந்தது.

கப்பலின் உள்ளிருந்து வெளியே பார்பதற்க்கு வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை ஏதோ ஒன்று பயங்கரமாக தாக்கியது.

உடனே டான்வாஸ் நாம் மேலே சென்று விடுவோம் என்று கூறிஇருக்கிறார்.ஆனால் ஃபிக்கர்ட் இவ்வளவு தூரம் மேலே திரும்ப மனமில்லாமல் கப்பலை கீழே நோக்கி செலுத்தி உள்ளார்.

இறுதியில் பல்வேறு தடைகளையும் தாண்டி 36 ஆயிரம் அடி பகுதி CHALANGER DEEP என்ற பகுதியை தொட்டு 20நிமிடங்கள் நின்று பார்த்து விட்டு பிறகு கடலின் மேற்பரப்பிற்க்கு சாதனை படைத்தான்.

(இன்று வரை இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை)

1985ல் ஆளில்லா நவீன நீர்மூழ்கி கப்பலை அனுப்பி  அப்பகுதியில் உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்தனர்.
அப்போது 60% ஆழத்தை அடைந்த போது ஏதோ ஒரு மிருகம் பலமாக தாக்கியதில் நீர்மூழ்கி கப்பலின் பல முக்கிய பாகங்கள் சேதம் அடைந்தது.

உடனே நீர் மூழ்கியை மேலே கொண்டு வந்து ஆராய்ந்த போது ஒரு மிக பெரிய பல் தடம் இருந்தது.

அதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஏனெனில் அந்த பல் தடமானது பல நூறு வருடங்களுக்கு முன் அழிந்து போனதாக சொல்லப்பட்ட கடல் அரக்கன் என்று அழைக்கப்படும் மெக்லோடன் சுறாவின் பல் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பிறகு வந்த நாட்களில் டைடானிக்,அவதார் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ்கேமரூன் உள்ளிட்ட பலர் இந்த CHALANGER DEEP பகுதியை அடைய முயன்றும் முடியவில்லை.

மேலும் அவ்வளவு பயங்கர ஆழத்தை நோக்கி செல்ல யாரும் முன்வரவும் இல்லை.என்பதே உண்மை.

மரியானா ஆழி ஆராய்ச்சி தகவல்கள்:-

*உலகிலேயே மிக உயரமான மலையை கொண்டு வைத்தாலும் பல நூறு அடிகள் ஆழம் இருக்கும்.

*உலகலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா போன்று 14 கட்டிடங்களை வைக்கலாம்.
*பூமியில் ஏற்ப்பட்ட பல்வேறு அழிவுகளிலும் இந்த பகுதி பாதிக்கப்படவில்லை என்றும் பூமி தோன்றியதில் இருந்து இன்று வரை எந்த மாற்றமும் இந்த பகுதியில் நிகழவில்லை.
*பல டன்கள் அழுத்தம் உள்ள பகுதியில் உயிரினங்கள் வாழ்வது எப்படி என்று இன்று வரை சரியாக அறியமுடியவில்லை.

இறுதி:-

பூமிக்கு வெளியே உள்ள நிலா,செவ்வாய் கிரகங்களுக்கு விண்கலங்களையும் மனிதனையும் அனுப்பி பெருமை கொள்ளும் நாடுகள் பூமியிலே இருக்கும் மரியானா ஆழியை பற்றி ஆராய முடியவில்லை என்பதே உண்மை.
மரியானா ஆழி பல மர்ம நிகழ்வுகள் நடைபெறும் பகுதியில் இதுவும் ஒன்று.

       பூமியின்‌ மர்மங்கள் தொடரும்.......

Post a Comment

6 Comments