Translate

new zealand facts and information

பூமி-நாடுகள்-பாகம்-38-நியூசிலாந்து:-
பசிபிக் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.மேலும் பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது மனிதன் கடைசியாக குடியேறிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
தலைநகர் - வெலிங்டன்.
மொழி.        - ஆங்கிலம், மாவோரி.
அரசு.            - மக்களாட்சி.
பரப்பளவு.   -2,68,680 கிமீ
மக்கள்தொகை - 4,252,098.
நாணயம்.     - நியூசிலாந்து டாலர்.
அழைப்பு குறி -‌ +64.

நியூசிலாந்து மக்கள் "நியூசிலாந்தை கடவுள் காப்பாராக"அரசியை கடவுள் காப்பாயாக" என்ற கொள்கையை கொண்டுள்ளார்கள்.

நியூசிலாந்து சிறப்புகள்:-

1.நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனாக இருந்தாலும் ஒக்லாந்து நகரம் பெரிய நகரமாக உள்ளது.

2.உலகிலேயே மருந்து பொருட்களை விளம்பரம் செய்யும் நாடு நியூசிலாந்து.
3.எவரஸ்ட் சிகரத்தை முதன்முதலாக அடைந்தவர் ‌நியூசிலாந்துகாரர்.

4.குறைந்த செலவில் வளமான வாழ்க்கை வாழ ஏற்ற நாடாக நியூசிலாந்து உள்ளது.

5.உலகிலேயே அதிக அளவு செம்மறியாடு வளர்ப்பு மற்றும் இறைச்சி ஏற்றுமதியில் முதல் நாடாக உள்ளது.

6.பெண்களுக்கு சம உரிமை வழங்கிய‌ முதல் நாடு நியூசிலாந்து.

7.பறக்க முடியாத பறவையான கிவி பறவை இங்கு அதிகம் உள்ளது.

8.பாம்புகளே இல்லாத நாடாக நியூசிலாந்து உள்ளது.

9.இரு ‌தேசிய கீதங்களை கொண்ட நாடு நியூசிலாந்து.
10.ஒரினசேர்க்கை சட்டபூர்வமாக அனுமதித்த நாடு நியூசிலாந்து.

11.உலகில் தொழில் ஆரம்பிக்க ஏற்ற நாடு என உலகவங்கி அங்கிகரித்து உள்ளது.முதலிடத்தில் உள்ளது.

12.கிவி பழத்தைவைத்து பல மில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது.

13.பால் உற்பத்தியில் 7வது இடத்தில் உள்ளது.

இவையே நியூசிலாந்து நாட்டின் சிறப்புகள் ஆகும்.

நியூசிலாந்தில் பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர்.பிற மத மக்களும் வாழ்கின்றனர்.

நியூசிலாந்து இராணுவம்:-
உலகளவில் 90வது இடத்தில் நியூசிலாந்து இராணுவம் உள்ளது.சட்ட விரோதமாக குடியேற்றம்,மற்றும் சுறா வேட்டையாடுபவர்களை தடுக்கிறது.

சுற்றுலா செல்வதற்க்கு ஏற்ற இடமாக உள்ளது.பெண்கள் பாதுகாப்பு அதிகம்.குறைந்த செலவு.புதிதாக தொழில் தொடங்க ஏற்ற நாடாக நியூசிலாந்து உள்ளது.

இறுதி:-
அமைதியான ‌நாடு நல்ல அரசியல் தலைவர்கள் எளிமையான சட்ட முறைமைகள் மக்கள் ஒற்றுமை ஆகியவை தான் நியூசிலாந்து நாடு சிறந்த விளங்க காரணமாக உள்ளது.

          வேறு நாட்டுடன் தொடரும்...........

Post a Comment

0 Comments