Translate

beauty tips of face

இயற்கை அழகு குறிப்புகள்:-
இன்று பெரும்பாலான நகர்ப்புற பெண்கள் அதிகம் பணம் செலவு செய்து தங்களுடைய முக அழகை மெருகூட்டுகின்றனர்.ஆனால் அதனால் வரும் சில பக்க விளைவுகளை பற்றி யோசிப்பது இல்லை 

ஆனால் இயற்கை நமக்கு குறைந்த செலவில் அழகான முக அழகை ஏற்படுத்தும் எந்த வித பக்க விளைவுகளும் இன்றி.

இயற்கை அழகு குறிப்பு:-

1.முகத்தில் உள்ள பருக்கள் நீங்க:-
முகப்பருக்கள் வருவதற்கு முதல் காரணம் எண்ணெய் உணவுகள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் ஆகும்.

பருக்கள் நீங்க:-
இளம் வேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் இயற்கையான முறையில் பசை போன்று அரைத்து முக பருக்கள் உள்ள இடத்தில் தொடர்ந்து ஒரு வாரம் வைத்து வந்தால் முகப்பருக்கள் மறைந்துவிடும்.

2.முக சுருக்கம்:-
முக சுருக்கம் ஏற்ப்பட காரணம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் காலநிலை ஆகும்.

முக சுருக்கம் நீங்க:-
தக்காளி பழத்தை இரண்டாக பிரித்து அதன் ஒரு பகுதியில் வெள்ளை சர்க்கரை சேர்த்து முகத்தில் தேய்த்துக்கொள்ளுங்கள் அல்லது தக்காளியை நன்கு அரைத்து அதனுடன் பச்சை பாலை கலந்து குளிப்பதற்கு முன் முகத்தில் வாரம் இருமுறை தடவி வந்தால் முக சுருக்கம் நீங்கும்.

3.முகத்தில் எண்ணெய் வடிதல்:-
முகத்தில் எண்ணெய் வடிய காரணம் அதிக கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவது மற்றும் அதிக குளிர்ந்த அல்ல சூடான நீரில் குளிப்பது ஆகும்.

எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்த:-
மிதமான நீரில் குளிப்பது இறைச்சி உணவுகளை குறைத்து கொள்வது
கொழுப்பு இல்லாத face creamகளை பயன்படுத்த வேண்டும் முள்தானிமெட்டி வாரம் 3 முறை முகத்தில் தேய்த்து குளிப்பது. எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்

4.கருவளையம்:-
கருவளையம் ஏற்பட காரணம் தூக்கமின்மை,புகைபிடிப்பது,கோபம் கொள்வது,ஆரோக்கியமற்ற உடல் எடை குறைப்பு செய்வதால் கருவளையங்கள் உண்டாகும்.

கருவளையம் நீங்க:-
ஒரு கையளவு புதினா இலையுடன்‌ மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து கருவளைத்தில் தேய்த்து வந்தால் கருவளையம் நீங்கும்.

5.வறண்ட சருமம்:-
வறண்ட சருமம் ஏற்ப்பட காரணம் நீர்சத்து குறைவு மற்றும் காற்றில் உள்ள மாசுகள் காரணம்.

வறண்ட சருமம் நீங்க:-
வறண்ட சருமம் நீங்க கற்றாழையை எடுத்து அதை அப்படியே முகத்தில் தினமும் தேய்து வர வறண்ட சுருக்கம் நீங்கும்.

6.முக எரிச்சல்:-
முக எரிச்சல் ஏற்ப்பட காரணம் முகத்தில் உள்ள கொழுப்பு மற்றும் வேர்வை கிருமிகள் ஆகும்.

முக எரிச்சல் நீங்க:-
முக எரிச்சல் நீங்க தர்பூசணி பழத்தின் வெள்ளை நிறை பகுதியை முகத்தில் வாரம் 3முறை தேய்த்து வந்தால் முக எரிச்சல் நீங்கும்.

7.கருமைநிற முகம்:-
வெண்மையான முகங்கள் கருமையாக மாற காரணமாக இருப்பது முகத்தில் உளள் இறந்த செல்கள் மற்றும் தூசுகள்.

கருமை நிறம் வெண்மையாக:-
முகத்தில் கருமை நிறம் போக்க கேரட்டை நன்கு அரைத்து அதனுடன் பச்சை பால்‌ மற்றும் தேன் சேர்த்து குளிப்பதற்கு 1மணி நேரத்திற்கு முன் முகத்தில் தேய்த்து கொண்டால் முக நிறம் மாறும் ஆனால் இதை பயன்படுத்தும் போது (சோப்பு)‌பயன் படுத்தக்கூடாது.

8.உதடு வெடிப்பு:-
உதடு வெடிப்பு ஏற்ப்பட காரணமாக இருப்பது நமது உடலின் வெப்பநிலை மற்றும் காலநிலை.

உதடு வெடிப்பு நீங்க:-
பச்சை பாலில் ரோஜாபூவிதழை பசை போன்று அரைத்து உதட்டில் தேய்த்து வந்தால் உதடு வெடிப்பு சரியாகும்.

9.கருப்பு நிற கழுத்து:-
கழுத்து பகுதி கருமை நிறமாக காரணம் அதிக வெயில் மற்றும் அரைகுறை குளியல்.

கழுத்து பகுதியில் கருமை நிறம் போக்க:-
தயிரில் சிறிதளவு மஞ்சள் எழுமிச்சை நன்கு கலந்து குளிப்பதற்கு முன் நன்கு கழுத்து பகுதியில் தேய்த்து 30நிமிடம் கழித்து குளித்து வந்தால் கருமை நீங்கும்.

10.முகம் பாதுகாப்பு:-

முகத்தில் எலுமிச்சை,தேன், சூடான நீர் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது.மற்றும் தினமும் குறைந்தது 5 முறை முகத்தை மிதமான நீரில் கழுவ வேண்டும்.மற்றும் coofe powderகளை முகத்தில் ஒரு நாளும் தடவகூடாது.
கருப்போ சிகப்போ முகத்தை பொழிவு டன் வையுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.

                                            தொடரும்..........










Post a Comment

0 Comments