Translate

south africa facts history

பூமி-நாடுகள்-பாகம்-31-தென் ஆப்பிரிக்கா:-
ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் 2,780 கிலோமீட்டர்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஆழகான மற்றும் ரம்மிய தோற்றம் கொண்ட நாடாகும்.
தலைநகரம்- கேப் டவுன்.
அரசு.              - மக்களாட்சி.
மொழி.           - ஆப்ரிக்கான மற்றும்
                               ஆங்கிலம்.
பரப்பளவு.     - 471 சதுர மைல்.
மக்கள் தொகை-52,981,998.
நாணயம்.       - தென்னாப்ரிக்க 
                                  ராண்டு.
அழைப்புக்குறி- +27

தென் ஆப்பிரிக்காவில் மூன்று தலைநகரங்கள் உள்ளன:பிரிட்டோரியா,ப்ளூம்பொன்டைன்,கேப்டவுன்.மிகப் பெரிய நகரமாக ஜோகன்னஸ்பர்க் உள்ளது.

தென்னாப்ரிக்க மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க சிறப்புகள்:-
1.போர்ச்சிகீசியர்கள் முதன் முதலாக தென் ஆப்பிரிக்க முனை  பகுதியை அடைந்தனர் அந்த முனைக்கு நன்நம்பிக்கை முனை என்று அழைக்கப்படுகிறது.

2.தியாகத்தின் சின்னம் அமைதியின் உருவம் என அழைக்கப்படும் நெல்சன் மண்டேலாவின் பூர்விக நாடாகும்.

3.உலகில் மொத்த சுரங்களில் எடுக்கப்படும் தங்கங்களில் 5ல் ஒரு பங்கு தென் ஆப்பிரிக்க நாட்டை சார்ந்தது.

4. விலையுர்ந்த பிளாட்டினம் எடுக்கப்படும் நாடுகளில் இந்நாடு முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
5.மணபெண்களுக்கு வரதட்சனை கொடுத்து திருமணம் செய்யும் கலச்சாரம் இங்கு உள்ளது.

6.தென் ஆப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர்கள் அந்நாட்டில் உள்ள 78% விவசாய நிலத்தை கொண்டுள்ளனர். இருப்பினும் வெள்ளையர்கள் வெறும் 8% மட்டுமே உள்ளனர்.

7.தென் ஆப்பிரிக்க நாடு விவசாயத்துறையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.உலகில் ஒயின் தயாரிப்பில் 8 வது இடத்தில் உள்ளது.

8.இந்நாட்டிற்க்கே உரித்தான ஆப்பிரிக்க யானை பறந்த நிலப்பரப்பில் வாழ்கிறது.

9.உலகிலேயே பணக்கார நாடாக இருக்க வேண்டிய தென் ஆப்பிரிக்க தற்பொழுது ஏழ்மையை நோக்கி செல்வது குறிப்பிடதக்கது.

10.தென் ஆப்பிரிக்காவின் வளையத்திற்க்குள் lesotho என்கிற நாடு இருப்பது குறிப்பிடதக்கது.
11.உலகிலேயே HIV நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருப்பது இங்குதான்.

12.மனித உரிமை மீறல் குற்றங்கள் அதிகம் நடப்பது குறிப்பிடதக்கது.

13.அதிக போதை மருந்து சட்டவிரோத செயல்கள் அதிகம் நடைபெறுகிறது.

இவை தென் ஆப்பிரிக்காவின் சிறப்புகள் ஆகும்.

தென் ஆப்பிரிக்காவில் பெரும்பாலும் கிறிஸ்தவம்,இஸ்லாம் மதங்கள் இருந்தாலும் அனைத்து நாட்டு மக்களும் இருக்கின்றனர்.

தென் ஆப்பிரிக்க‌ இரணுவம்:-

உலகில் 32வது இடத்திலும் ஆப்பிரிக்கா கண்டத்தில் மிக முக்கிய இடத்திலும் உள்ளது.
பொருளதாரத்தில் தற்பொழுது மெதுவாக முன்னேறி வருகிறது.

தென் ஆப்பிரிக்க சுற்றுலா:-
அதிக குற்ற செயல்கள் பெண்கள் பாதுகாப்பு மிக மோசம் வழிப்பறி கொலை,கொள்ளை,குற்ற செயல்கள் அதிக அளவில் உள்ளதால் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக இல்லை.

இறுதி:-
உலகிலேயே பணக்கார நாடகா இருக்க வேண்டிய தென் ஆப்பிரிக்க இனவெறி நிறவெறி ஆதிக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

             வேறு நாட்டுடன் தொடரும்.........

Post a Comment

0 Comments