காங்கோ ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடாகும்.உலகின் 10வது பெரிய நாடாகவும் உள்ளது.1971ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் சயீர் என்று இருந்தது.வைர வளங்கள் உள்ள நாடாகவும் உள்ளது.
தலைநகரம் -கின்ஷாசா.
அரசு. - ஜனாதிபதி முறை
குடியரசு.
மொழிகள். - பிரெஞ்சு,லிங்காலா,
கொங்கோ,கிட்டூபா.
பரப்பு. - 23,44,858கி.மீ
மக்கள் தொகை-62,637,028.
நாணயம். - கொங்கோ பிராங்க்.
அழைப்புக் குறி-243.
நீதி-அமைதி-வேலை என காங்கோ மக்கள் கொள்கை கொண்டு உள்ளனர்.
காங்கோ சிறப்பு:-
1.அதிக இயற்க்கை வளங்கள் உள்ளதால் ஆப்பிரிக்காவின் விடிவெள்ளி என அழைக்கப்படுகிறது.
2.காங்கோ நாட்டு மக்களை போர்ச்சுகீசியர்கள் அடிமைகளாக உலகம் முழுவதும் நாடுகடத்தினர்.
3.காங்கோவில் அதிக மனிதவளம்,இயற்க்கைவளம் இருப்பதால் ஐரோப்பிய நாடுகளில் முக்கிய நாடான பெல்ஜியம் காங்கோவை அடிமையாக்கியது.
4.உலகிலே அதிக பிரெஞ்ச் மொழி பேச கூடிய மக்கள் இங்கு உள்ளனர்.
5.கொரிலா,ஜிம்பன்சி குரங்கு இனங்கள் அதிகமாக உள்ளன.
6.ஆப்பிரிக்க கண்டத்தின் மையத்தில் காங்கோ இருப்பதால் 250க்கும் அதிகமான மொழிகள் பேசபடுகிறது.
7.காங்கோ தேசம் பூமியில் ஏழ்மையான ஒன்றாகும், ஆனால் அதே நேரத்தில் வளங்களில் பணக்கார நாடுகளில் ஒன்றாகும்.
8.தங்கம், தாமிரம், வைரங்கள் மற்றும் மோதல் உலோகங்கள், தந்தலம் ஆகியவை ஏராளமாக உள்ளன.
9.இந்த அதிக விலை வளங்கள் வன்முறை ஆயுதக் குழுக்களால் லாபம் ஈட்டுகின்றன மற்றும் நிறைய உறுதியற்ற தன்மையை உருவாக்குகின்றன.
10.காங்கோ மக்கள் அதிக விளைவு கூடிய இயற்கை வளங்களை வெறும் கைகளால் எடுப்பதால் புதிய நோயிகள் தாக்கப்படுகின்றன. இதனால் இன்று வரை பிற்க்கும் குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறக்கின்றன.
சிறப்புகள் ஆகும்.
காங்கோ உண்மையில் உலகின் பணக்கார நாடுகளாக இருக்க வேண்டும்.ஏனெனில் உலகில் அதிக வைர உற்ப்பத்தி வைரம் வைத்துள்ள நாடாக இருந்தாலும் இன்றும் ஏழை நாடாக உள்ளது.
ஆம்! சில வளர்ந்த நாடுகள் தங்களுடைய சுயநலத்திற்க்காக தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் தங்களுடைய துருப்புகளை அனுப்பி அங்கு உள்ள வைர வளங்களை சுரண்டுகிறது.
மேலும் தீவிரவாதம் இருக்கிறது என்று சொல்லி சில வல்லரசு நாடுகள் வாழ தகுதி இல்லாத நாடுகள் பட்டியலில் காங்கோ நாட்டை சேர்த்து உள்ளது.
காங்கோ இராணுவம்:-
காங்கோ இராணுவம் காங்கோவில் செயல்படும் புரட்ச்சி படைகளுக்கு எதிராக வல்லரசு நாடுகளுடன் இணைந்து தாக்குதல் நடத்துகிறது.
காங்கோ சுற்றுலா:-
சற்றுலா செல்வதற்கு ஏற்ற நாடாக இல்லை.காங்கோ நாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கு சில நாடுகள் தடை விதித்து உள்ளன.
காங்கோவில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த மதங்கள் உள்ளன.
இறுதி:-
காங்கோ ஆப்பிரிக்காவின் வைரமாக இருக்க வேண்டிய நாடு.
வேறு நாட்டுடன் தொடரும்........
0 Comments