Translate

psychology-உளவியல்

Psychology-உளவியல் பாகம்-1 தன்நம்பிக்கை:-

கடவுளாள் முடியதெனில் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்-
 என்ற வசனத்திற்கு ஏற்ப நமுடைய முயற்சியும் தன்நம்பிக்கையும் என்றும் மனித வாாழ்க்கையில் முக்கியமான 
ஒன்றாகும்.

மனித முயற்சி தன்நம்பிக்கை:-
 
   மனிதன் முதலில் புதிதாக தன்நம்பிக்கை உடன் ஒரு செயலை
ஆரம்பிக்கிறன். அதில் சில முறை தோற்ற உடன் அதை விட்டு விடுகிறன். ஆனால் மனிதன் அங்கு தோல்வியை விட்டு செல்லவில்லை

மாறாக தன்னுடைய முயற்சி தன்நம்பிக்கையை விட்டுவிடுகிறன்.
 இது தான் மனிதன் செய்யும் முதல் தவறு.
  
இரண்டாவது ஆக மனிதன் புதிய நல்ல ஒரு செயலை செய்வதற்கு தயங்குகிறான் காரணம் தன்னை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்வார்களே, தன்னை 'நல்லவன்டா' என கூறி கிண்டல் செய்வார்களோ என்ற மனதில் வரும் தாழ்வு மனப்பான்மை ஆகும்.

இங்கு அவன் பிறர்க்காக தன்னுடைய அடையாளத்தை அழித்து அவன் நல்லெண்த்தையும் 
தன்நம்பிக்கையும் இழக்கிறான்.

மூன்றாவதுதாக மனிதன் ஒரு செயலை செய்வதற்கு முன்  தன்னை மற்றொருடன் ஒப்பிட்டு பார்கிறன்
 இதனால் அவன் மனதில் நிலையற்ற தன்மை உண்டாகுகிறது.

இதனால் அவன் அந்த செயலை செய்வதற்கு முன் விட்டு விடுகிறான்.

இங்கு அவன் விட்டு செல்வது முயற்சியை அல்ல மாறாக தன்னுடைய முழு நம்பிக்கையை விட்டு செல்கிறன்.

தன்நம்பிக்கை அதிகரிக்க என்ன வேண்டும்:-
1. தோல்வியை கண்டு பின் வாங்கதிற்கள்.
2.உங்களால் எதும் முடியும் என்ற எண்ணத்தோடு செயல்படுங்கள்.

3.உங்கள் முதுகு பின் பேசுபவர்களை பற்றி சற்றும் சிந்திக்காதிர்கள்.
4.உங்களுக்கு என உள்ள தனிதன்மையோடு செயல்படுங்கள்.

5.பிறறை உங்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.
6.வெற்றியோ,தோல்வியோ எதுவாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள்.

7.உயர்ந்த எண்ணதொடு செயல்படுங்கள்.
8.பிறர் முன் மகிழ்ச்சியாக இருங்கள்.

9.நல்லதை செய்ய பின்வாங்கதீர்கள்.
10.பிறர் நல்ல முயற்சிகளை அழிக்க விரும்பாதீீர்கள்.

இவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைபிடியுங்கள் தன்நம்பிக்கை உயரும்.

முயற்சி ,தன்நம்பிக்கை நல்லெண்னம் பயன்கள்:-

1.தாமஸ் ஆல்வா எடிசன் முயற்சியை கைவிட்டு இருந்தால் இன்று ஒளி,ஒலி இல்லை.

2.ஐயாஅப்துல்கலாம் பணத்திற்ககா வெளிநாடு சென்றிறுந்தால் நம் நாட்டுக்கு அணுசக்தி இல்லை.

3.நாம் தோற்று விடுவோம் என நினைத்து இருந்தால் இந்தியாக்கு
இன்று வரை சுதந்திரம் இல்லை.

4.தமிழில் பேச வெட்கபட்டிருந்தால் இன்று தமிழ் மொழி அனைத்து மொழிக்கும் முதல் மொழியாக இருக்காது.

5.இரண்டு அணுகுண்டுகளை நெஞ்சில் வாங்கிய ஜப்பான் அடுத்த நாட்டுடன் ஒப்பிட்டு பார்த்திருந்தால் வல்லரசு நாடக மாறி இருக்காது.
 
 இவை அனைத்தும் முயற்சி தன்நம்பிக்கையின் முக்கிய உதாரம் ஆகும்.

மனித முயற்சி செய் அதை தன்நம்பிக்கை, தெய்வ பயத்துடன் செய் கண்டிப்பாக முன்னேற்றம் காண்பாய்.

மனித நல்லதை செய்ய தயங்காதே அதனால் யாரும் பாதிக்கபடவில்லை.
உன் தாய் மகிழ்ச்சி அடைவாள்.

மனித கெட்டதை செய்ய வெட்கம்கொள் ஏன்னென்றால் அதனால் இழப்புகள் அதிகம்.உன்னை பெற்ற தாயும் மனம் வருந்துவாள்.
இனி உங்கள் வாழ்க்கை முயற்சி தன்நம்பிக்கை உடன் தொடரட்டும்...

                                              தொடரும்.........
 
  

Post a Comment

4 Comments