உடல் பருமன்மற்றும் உடல் நலிந்து இருக்கிறோம் என கவலையா? குண்டாக இருப்பதால் உங்களால் எதும் செய்ய முடியவில்லை என வருத்தமா?
மற்றவர் உங்களை குண்டு ஓமகுச்சி ஒல்லி என கிண்டல் செய்கிறர்களா ?முதலில் அதை நினைத்து கவலை கொள்ளதீர்கள்.
உடல் பருமன் என கவலை கொள்வதால் மேலும் உங்கள் உடல் பருமன் மட்டுமே ஆகும். உடல் பருமன் அதிகம் இருப்பாதல் உங்கள் எலும்பின் எடையும் அதிகம் இருக்கும்.மேலும் உங்கள் உடல் உள்ளுறுப்பும் வளர்ந் இருக்கும்.
உங்கள் எடை குறையாமல் உங்களை வேகப்படுத்த சில குறிப்புகள்:-
1. முதலில் காலை 5:30-6:00 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும்.
(பயன்-சோம்பல் விட்டு போகும்)
2.1டம்ளர் நீர் குடிங்கள். (எலுமிச்சை சாறு)
3.தொடர்ந்து இரண்டு நாட்கள் குறைந்தது 3கி.மி க்கு வேகநடை பயிற்சி செய்யுங்கள்.
4.அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்கள் 1.5கி.மி க்கு ஓட்ட பயிற்சி செய்யுங்கள்.
(பெண்கள் ஸகிப்பிங் பயிற்சி செய்யலாம்)
5.அதன் பின் இரண்டு நாட்கள் 2மணிநேரம் உடற்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
(பயன்-உடல் உள்உறுப்புகள் பலம் பெறும்)
6.நீங்கள் சாப்பிடும் உணவுடன் கேரட், பீட்ரூட், பீன்ஸ், கீரைகள் சேர்த்து கொள்ளுங்கள்.
7. இரவு உணவுடன் பேரீச்சம் பழம்(3)எடுத்து கொள்ளவும்.
இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்துவர உங்கள் உடல் பலம் பெறுவதை உணர்வீர்கள்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:-
1.மைதாவில் செய்யப்பட்ட அனைத்து பொருள்களும் தவிற்க வேண்டும்.
2.அதிகமான இனிப்பு பொருள்கள் எடுக்க கூடாது.
3.எண்ணெய் உணவு பொருட்கள், குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் கண்டிப்பாக எடுக்க கூடாது.
4. மது,புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் குறைத்து கொள்ள வேண்டும் அல்லது நிறுத்தி கொள்ள வேண்டும்.
5.வாரம் ஒருமுறை மட்டுமே இறைச்சி உணவுகள் எடுக்க வேண்டும்.
உடல் எடை அதிகரிக்க செய்யவேண்டியவை:-
1.காலையில் வெறும் வயிற்றில் பேரீச்சம்(2) பழம் சாப்டவேண்டும்.
2.முளைகட்டிய தாணியங்கள் பருப்பு வகைகள் சேர்த்து கொள்ள வேண்டும்.
3.வாழைப்பழம், கொய்யா ஆகிய பழங்கள் சாப்பிட வேண்டும்.
4.இறைச்சி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை எடுத்து கொள்ள வேண்டும்.
5.நார்ச்சத்து, மாவுச்சத்து உணவுகள் எடுத்து கொள்ளவேண்டும்.
உடல் எடை அதிகரிக்க செய்ய கூடாதவை:-
1.எடை அதிகரிக்க வேண்டும் என்று வயிறு முழுவதும் சாப்பிட கூடாது.
2.மைதா உணவு எடுக்க கூடாது
3. நொறுக்கு தீனி உணவுபண்டங்களை தவிர்க வேண்டும்.
5.எலுமிச்சை ஜூஸ் அதிகம் எடுத்து கொள்ள கூடாது.
6.மது, புகைபிடித்தல் கண்டிப்பாக கூடாது.
7.தரமான இறைச்சி உணவுகளை சாப்பிட வேண்டும்.
இவை உடல் எடை அதிகரிப்பவர்கள்
செய்ய வேண்டியவை ஆகும்.
இவற்றை 2மாதகாலம் செய்து வர உடலில் சக்தி மற்றும் உடல் எடை ஆரோக்கியமாக இருக்கும்.
உடல் ஆரோக்கியமாக வைக்க முயற்சி எடுங்கள் மகிழ்ச்சியாக வாழுங்கள்.
தொடரும்.......
4 Comments
Bice
ReplyDeleteNice
ReplyDeleteNice news
ReplyDeleteGood health information
ReplyDelete