பெண்கள் கல்வி திறமைகளையும் அவற்றின் வெற்றி தோல்வி யாவற்றையும் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
'அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு'
'ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது'
என்பது நம் சான்றோர்களின் வாக்கு ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் ஏட்டுச்சுரைக்காயும் கறிக்கு உதவும் என்று நிரூபித்துக் காட்டிய பெண்கள்.
நம் முன்னோர்கள் காலத்தில் பெண்கள் பருவநிலையை அடைந்ததும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் காரணம் பெண்ப் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை.
இன்றைய சமுதாயத்தில் வாழும் பெண்களுக்கு 18-வயது பூர்த்தியான பிறகு திருமணம் என்ற சட்டம் உள்ளது.
வெளியில் வந்தால் சந்தோசம்
வீட்டுக்குள்ளே சந்தேகம்
எங்க பாடு பெரும் பாடு
மேகம் தாண்டி போகலாம்
வானம் தாண்ட முடியுமா
தெரியும் எங்கள் எல்லை கோடு.
என்ற பாடல் வரிகள் எல்லாருக்கும் தெரிந்ததே.சில பெண்கள் நிலை இதுதான் காரணம்.
இந்த காலக்கட்த்தில் கூட பெண்களை வீட்டிற்குள்ளே வைத்திருக்கும் நிலை கூட உள்ளது.
இப்படிப்பட்ட பெண்களின் மத்தியில் எங்களாலும் சாதிக்க முடியும் என்று உலகறிய வெளிப்படுத்திய நம் பெண்கள்.
ஐஸ்வரியா ராய் அழகை வாங்கு
ஜான்சி ராணி வீரம் வாங்கு
சானிய மிர்சா இளமை வாங்கு
மூன்றும் சேர்ந்து உலகை வாங்கு
என்ற பாடலின் வரிகள் பெண்களின் சாதனைகளை விளக்குகிறது.
ஆம்...............
முதல் இந்திய பெண் மருத்துவர்
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி.
உலகின் முதல் பெண் மருத்துவர்.
எலிசபெத் பிளாக் வெல்.
இரும்பு பெண்மணியாக கருதப்படும்
இந்திர காந்தி.
தன் அன்பின் மூலம் கருணை இல்லம் உருவாக்கி பல ஆதரவற்றோருக்கும் நோயுற்றோருக்கும் வாழ் வழித்த
அன்னை தெரஸா.
விளையாட்டு துறையில் சாதனை படைத்த பி.வி.சிந்து.
வீரத்திலும் சாதனை படைத்த
ஜான்சி ராணி.
இந்திய விடுதலை போரட்டத்தில் வேலுநாச்சியார், இலட்சுமி சாகல்,
வை.மு.கோதை நாயகி அம்மாள் ,கி சாவித்திரி அம்மாள்,தில்லையாடி வள்ளியம்மை இன்னும் நிறைய பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேற்றம் அடைந்துள்ளன.விமான ஓட்டி,கப்பல் மாலுமி,தொழில்த்துறை,கல்விதுறை,அரசியல்,கலை,இலக்கியம்,விளையாட்டுத் துறை போன்ற அனைத்துத் துறையிலும் சாதனைப் படைத்துள்ளனர்.ஆணுக்கு பெண் சமம் என்பதை உருவாக்க வேண்டும்.
ஆண்கள் மட்டும் தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் ஆண்களின் மனது .
ஆனால் பெண்களும் ஆண்களுக்கு நிகராக வேலைக்கு செல்ல வேண்டும்.நம் முன்னோர்கள் பெண்களை வீட்டிள் பூட்டி வைத்து முட்டாளாக்கி விட்டனர் பெண்களை.
இன்றைய காலத்து பெண்களின் நிலை கிரிக்கெட்டில் கூட ஆண்களுக்கு நிகராக பெண்கள் உள்ளனர்.சிலப் பெண்கள் வீட்டில் வேலை செய்வதை மட்டுமே பலர் குறிக்கோளாக வைத்துள்ளனர்.
எத்தனையோ சாதனைப் படைத்து வரும் பெண்களின் மத்தியில் பயந்து பயந்து வீட்டிற்குள் இருக்கும் பெண்மணிகளே வீட்டை விட்டு வெளியே வாருங்கள் இந்த சமுதாயத்தில் பதிய ஒரு பாதைக்கு கொண்டு செல்லுங்கள்
பெண் கல்வியைப் போற்றுவோம்
பெண்களை முன்னேற்றுவோம்.
'பெண்' கடவுளுக்கு சமம் ஆனாவள்.
தொடரும்......
0 Comments