Translate

நன்நெறி கதை-story of ethics

நன்னெறி கதைகள்:- 1
  
உண்மை ஒருநாள் நம்மை காக்கும்.

கணவன் மனைவி குழந்தைகள் அனைவரும் தங்களுடைய பொருளதார வளர்ச்சிக்கா தங்கள் நாட்டை விட்டு அண்டை நாட்டிற்க்கு குடியேறினர்.

அங்கு அவர்கள் தங்கள் கையில் இருந்த பணத்தை வைத்து சிறிய அளவில் தொழில் தொடங்கினர். தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்தது.கணவன் மனைவி இருவரும் நாம் இந்த தொழிலை இன்னும் பெரிது பண்ண முடிவு செய்து வங்கியில் கடண் பெற முடிவு செய்தனர்.

வங்கி மேலரை பார்த்தனர் அவர் அவள் கணவன்னிடம் நீங்கள் யார்‌ பெயரில் தொழில் வைத்துள்ளிர்கள் என்று கேட்டார்.‌அதற்கு கணவன் தன் மனைவி பெயரில் வைத்துள்ளேன்
என்று கூறினார்.

உடனே வங்கி மேலாளர் அப்படி என்றால் உங்கள் மனைவி பெயரில் கடன்   பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார். உடனே அவர் சரி நல்லது என கூறி கடன்‌பெற்றார்.

கணவன் மனைவி இருவரும் தொழிலை விரிவு படுத்தினர்.சில ஆண்டுகளில் தொழில் நன்கு‌ முன்னேறியது.அவர்கள் முதல் குழந்தைக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவர்களாள் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. வங்கியில் வாங்கிய கடனையும் சரியாக செலுத்த முடியவில்லை.

மாதங்கள் கழிந்தது வங்கியின் துனை மேலாளர் அவர்கள் நிறுவனத்திற்தகு சென்று கடன்‌தொகை செலுத்துங்கள் என்று கூறினார்.கணவன் உடனடியாக பணம் இல்லாத காசோலையை கொடுத்து அந்நேரத்தை சமாளித்தார்.

காசோலையை பெற்ற மேலாளர் வங்கிக்கு சென்று காசோலையை சரிபார்த்தார். அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என தெரிந்ததும் காசோலை மோசடி என 
காவல் துறையில் புகார் செய்தார்.

காவல் அதிகாரி அங்கு சென்று உங்கள் மனைவியை கைது செய்கிறோம் என கூறினார்.அவள் கணவன் அவளை கைது செய்ய வேண்டாம் என்னை கைது செய்யுங்கள் என்று முறையிட்டார் .

அதற்கு காவலர் வங்கியில் உங்கள் மனைவி பெயரில் கடன் பெற்று உள்ளீர்கள் அதனால் உங்கள் மனைவியை கைது செய்கிறோம் என்று கூறினார்.

உடனே பெண்‌காவலர் ஒருவர் அவர் மனைவியை அழைத்து சென்றார்.

மறுநாள் வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது.வழக்கை விசாரித்த நீதிபதி வங்கியில் வாங்கிய கடனை செலுத்துங்கள் இல்லை சிறை செல்லுங்கள் என கூற அவள் கணவன் நடந்ததை கூறினார்.

உடனே நீதிபதி சட்டம் இவர்களை தண்டித்தது.ஆனால் மனிதநேயம் இவர்களை காக்கும் என மறைமுகமாக கூறினார்.

அங்கு இருந்த காவல் அதிகாரி உங்களை சிறைக்கு அழைத்து செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை என கூறினார்.

ஏன்? என்று அந்த பெண்' காவல் அதிகாரியிடம் கேட்க அதற்கு காவல் அதிகாரி கூறியது.எங்கள் நாட்டில் நிறை பேர் வங்கியை ஏமாற்றி விட்டு அயல் நாடு சென்று ஆடம்பரம்மாக வாழ்கின்றர் ஆனால்

 நீங்கள் உண்மையை கூறினீர்கள் நீங்கள் யாரயும் ஏமாற்ற‌ வேண்டும் என்று இதை செய்யவில்லை என்று கூறினார்.

உங்கள் கடனை நாங்கள் பார்து கொள்கிறோம் நீங்கள் வீடு செல்லுங்கள் என்று அவர்களை அனுப்பிவைத்தார்.

பொருள்:-
 அவர்கள் உண்மையாக இருந்ததால் அவர்களை உண்மை காப்பாற்றியது.
நாமும் உண்மையாக இருப்போம்.

இன்று:-
நாட்டில் பல ஆயிரம் கோடிவாங்கியனை விட்டு விட்டு வயிற்றுக்கு சோறுபோடும் விவாசாயிடம் அதிகாரம் காட்டுகிறது பல கோடிகள் வாங்கியவனை பாதுகாக்கிறது.
   யோசியுங்கள்..

மனித! உண்மையாக உன் வாழ்க்கை தொடரட்டும்.........

கமெண்ட் பன்னுங்க..
                                             தொடரும்........

Post a Comment

4 Comments