Translate

psychology-உளவியல்

Psychology-உளவியல் பாகம்-2துணிச்சல்:-
"துணிச்சல் மனிதன் தன் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் முதல் படி"
நம்முடைய வாழ்க்கையில் தன்நம்பிக்கை வந்தஉடன் அடுத்து நாம் எடுத்து வைக்கும் ஒரு படி துணிச்சல்.

மனிதனின் துணிச்சல்:-

மனிதன் துணிச்சலுடன் சில செயல்களை செய்யும் போது.மனிதன் "இது தான" என்கிற வசனத்தை தன் மனதில் வைத்துகொண்டு செயல்படுகிறன்.இது மனிதன் செய்யும் முதல் தவறு.

துணிச்சலுடன் ஒரு செயலில் இறங்கிவிட்டு தன்னால் முடியவில்லை என்றால் வேறு யாரவாது செய்து முடிப்பார்கள் என என்னி செயலில் இறங்குகிறன் இது இராண்டாவது தவறு.

மனிதன் ஒரு‌ மோசமான எண்ணம் வைத்துள்ளன் சிறிய போதை இருந்தால் போதும் நான் எதையும் செய்வேன் என்கிறான்.

இது‌மூன்றாவது தவறு அதுமட்டும் அல்ல இது மனிதனை தவறான வழியில் இட்டு செல்லும். 

துணிச்சல் அதிகரிக்க என்ன வேண்டும்:-
1.தெளிவான சிந்தனை வேண்டும்.
2.நாம் செய்யபோகிற செயலை பற்றி ஆலோசிக்க வேண்டும்.
3.சுய மதிப்பிடு வேண்டும்.
4.அதில் உள்ள நல்லது கெட்டது பற்றி
ஆராய வேண்டும்.
5.பொறுமையுடன் இருக்க வேண்டும்.

6.உங்களுடைய பலம் பலவீனம் எது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
7.சோர்வாக இருக்க கூடாது,உற்சாகமாக இருக்க வேண்டும்.
8. தலைக்கனம் இருக்க கூடாது.
9.பின்வாங்க கூடாது.
10.அமைதியாக செய்து முடிக்க வேண்டும்.
 இவை மனிதனின் துணிச்சலை அதிகரிக்க செய்யும்.

மனிதா! நீ துணிந்து செய்யும் செயலில் இருந்து பின்வாங்கதே அது உன் வாழ்க்கையை பின்னடைய செய்யும்.
மனித ஒருநாளும் தவறு செய்வதற்கு துணிவு கொள்ளாதே அது உன்னை மரணத்திற்கு இட்டு செல்லும்.

நல்ல செயல் செய்யும் போது உன்னை யார் தடுத்தாலும்.துணிந்து அந்த செயலை செய்து முடி உலகம் உன்னை திரும்பி பார்க்கும்..

மனிதா! துணிவுடன் உன் வாழ்க்கை தொடரட்டும்.
                                          தொடரும்.........

Post a Comment

2 Comments