நம் உடலில் மிக முக்கியமான வயிறு
ஆம்!நம் வயிற்றில் உணவு இருந்தால் தன் நம் மகிழ்ச்சி உடன் நமது வேலைகளை செய்ய முடியும்.
ஆனால் நாம் இன்றய காலக்கட்டத்தில் பசியில் என்ன சாப்பிடுகிறோம் என்பது கூட தெரியமல் வயிற்றுக்கு பிடிக்காத உணவுகளை உண்டு வயிற்றை தொந்தரவு செய்கிறோம்.
வயிற்றுக்கு பிடிக்காதவை:-
1.எப்போதும் சாப்பிட்டுகொண்டு இருப்பது.
2.அதிக காரமான உணவுகளை உண்பது.
3.மது அருந்துவது,நேரம் தவறி உண்பது.
4.உணவுக்கு பின் பழங்கள் சாப்பிடுவது.
5.எதிர்மறை உணவுகளை உண்பது.
6.முகம் குப்புற உறங்குவது.
7.அதிக புளிப்பு உணவுகளை உண்பது.
8.நீர் குடிக்காமல் இருப்பது.
9.பிடிக்காத உணவுகளை உண்பது.
10.பசியால் உள்ளவரை பார்க்கவைத்து உண்பது.
இவை நம் வயிறு விரும்பாத செயல்கள் ஆகும்.
வயிறுக்கு பிடித்தவை:-
1.பசிக்கும் போது மட்டும் உணவு உண்பது.
2.உணவுக்கு முன் நீர் அருந்துவது.
3.எளிதில் செறிக்க கூடிய உணவுகளை உண்பது.
4.இரவு நேரங்களில் நல்ல உறக்கம்.
5.மாதம் ஒருமுறை வயிற்றை இயற்க்கை முறையில் சுத்தம் செய்வது.
6.வாரம் ஒரு முறை நீர் உணவுகள் மட்டும் உண்பது.
7.இரவு உணவுக்கு பின் சூடான நீரில் தேன் கலந்து பருகுவது.
8.சிறிய உடற்பயிற்சி.
9.காலை எழுந்த உடன் சீரகம் கலந்த நீர் பருகுவது.
10.குறைந்தது 5லிட்டர் நீர் தினமும் குடியுங்கள்.
உணவு சாப்பிடும் முறை:-
1.தரையில் அமர்ந்து உணவு உண்ணவேண்டும்.
2.நன்றாக ருசி அறிந்து மெதுவாக உண்ணவேண்டும்.
3. உணவுக்கு முன் நீர் குடியுங்கள்.
4.சாப்பிடும் போது இடையில் நீர் குடிக்க வேண்டாம்.
5.பேசிக்கொண்டு சாப்பிட வேண்டாம்.
6.சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிட வேண்டாம்.
7.சாப்பிடும்போது மனதில் எதையும் நினைத்து கொண்டு சாப்பிட வேண்டாம்.
8.நின்று கொண்டு எதையும் சாப்பிட வேண்டாம்.
9.மனதிற்கு பிடிக்காத உணவுகளை சாப்பிட வேண்டாம்.
10.இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு சாப்பிடுங்கள்.
இவை சாப்பிடும் முறையாகும்.
நாம் உழைப்பதே பசி இல்லாமல் வாழத்தான்.நல்ல முறையில் உண்ணுங்கள்.வயிற்றை நல்ல முறையில் பாதுகாத்து கொள்ளுங்கள்.
இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு பசியால் வாடுவோறுக்கு கொடுத்து உண்ணுங்கள்.
இன்றும் இந்த உலகத்தில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு வேளை உணவுக்கு ஏங்கும் மக்கள் இருக்கின்றனர்.
பகிர்ந்தளிப்பு,மகிழ்ச்சியுடன் உணவு உண்ணுங்கள்.உங்கள் வயிற்று நல்ல முறையில் கவனியுங்கள்.
தொடரும்..........
2 Comments
Useful article
ReplyDeleteGood food good health
ReplyDelete