மனிதன் செல்லும் பாதை
இன்றய நவீன உலகில் மனிதன் வாழ்க்கையில் எதைநோக்கி போகிறோம் என்பது கூட தெரியாமல் தன் வாழ்க்கை பயணத்தை நாள்தோறும் தொடர்கிறான்.
கண்போன போக்கிலே
கால் போகலாமா?
கால்போன போக்கிலே
மனம் போகலாமா? என கூறிவிட்டு
கண் போன போக்கிலே மனிதன் செல்கிறான்.
முதலில் உன் வாழ்வு எங்கு செல்கிறது என்று பார். நீ செல்லும் பாதை நீ அமைத்தாக இருக்கனும். நீ செல்லும் பாதையில் என்ன தடங்கள் இருக்கும் என்று பார். அதன் பின் உன் பாதையை உறுதி செய் .அதன் பின் அதில் பயணம் செய்.
செல்லும் பாதை:-
நீ செல்லும் பாதை ஆகாயம் என்றால் நிலத்தில் இருக்கும் பள்ளங்கள் உன்னை என்ன செய்யும்.நம் வாழ்வு மாறுபாடுகள் உள்ளது. அதை ஏற்க்க மறுக்காதே. ஆனால் அதை உன்னால் மாற்ற முடியும்.அதை நீ செல்லும் பாதையில் அமைதியாக செல் அப்போதுதான் உன் வாழ்க்கைக்கு யார் தடை போடுகிறார்கள் என்று தெரியும்.
உன் பாதையில் செல்லும் போது நான் ஏன் இந்த பாதையில் செல்ல வேண்டும் என நினைக்காதே அது உன் முயற்ச்சியில் தடை போடும்.
நீ செல்லும் பாதையில் பிரச்சனைகள் வரும் சில பிரச்சனைகள் உன்னை வளர்க்கும்.சில பிரச்சனை உன் வாழ்க்கைக்கு பாடம் கற்பிக்கும்.
மாறாக பிரச்சனை வருகிறது என பின்வாங்கதே.
தேனீகள் தீக்கு இரையாகும் ஆனால் அது தேன் எடுக்காமல் இல்லை.
சிங்கம் வாழும் காட்டில் தான் மான் வாழ்கிறது.
பயம் கொள்ளாதே அது உன்னை செயல்படுத்த விடாது.
நீ செய்கிற செயிலில் உன்னை இந்த உலகம் திரும்பி பார்க்கவை.ஒரு நாளும் நேரம் இல்லை என்று கூறாதே. அது சோம்பேறிகள் கூறும் வார்த்தை. உன் பாதையில் செல்லும் போது யாரிடமும் பொய் கூறாதே
பொய் அழகானது ஆனால் ஆபத்தானது.
நீ செல்லும் பாதையில் எல்லோரையும் நம்பு ஆனால் அந்த நம்பிக்கை உன்னைஅழிக்காமல் பார்த்து கொள். யாரிடமும் உதவி எதிர் பார்க்காதே.
கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்காதே.
மகிழ்ச்சியாக உன் பாதையில் செல் நீ அடைய நினைத்த இலக்கை அடைவாய்.
நீ திட்டமிட்ட பாதையில் ஒடாதே மெதுவாக செல் அப்போதுதான் அந்த பாதையை பற்றி உனக்கு தெரியும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படி எடுத்துவை. ஆனால் நீ எடுத்து வைக்கும் படியில் மட்டும் கவனத்தில் வை.
ஒரு நாள் நீ உன் இலக்கை அடைவாய் அன்று நீ வந்த பாதையை திரும்பி பார் கண்டிபாக உன்னை பார்த்து சிரித்தவர்கள் உன்னை பாரட்டுவார்கள்.
இது உன் வாழ்க்கை. நீயே உன் இலக்கை முடிவு செய். நல்ல ஒரு இலக்கை உறுதி செய். நீ கண்டிபாக முன்னேறுவாய்.
உன் இலக்கை தீர்மானித்து உன் வாழ்க்கையை தொடங்கு....
தொடரும்.......
3 Comments
Super motivation article
ReplyDeleteGood motivation article
ReplyDeleteSay about discipline
ReplyDelete