Translate

நன்னெறி கதைகள்

நன்னெறி கதைகள்:-2

அன்பு எங்கேயும் உள்ளது அது நம்மை எப்போதும்  சந்தோச படுத்தும்.

எப்போதும் பரபரப்பாக இயங்ககூடிய தூபாய் நகரம் அன்றும் தன் பணிகளை ஆரம்பித்தது.

அங்கு உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை செய்யும் குமார் என்னும் நபர் தன் வேலைகளை ஆரம்பித்தான். ஆனால் அங்கு வந்த மேலாளர் குமாரை பார்த்து நீ இன்று உணவு கிடங்கில் வேலை செய் என்று கூறினார்.

அதற்கு குமார் எனக்கு இன்று கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என மேலாளரிடம் கூறினான்.அதற்கு மேலாளர் அப்டியா என்று உடனே இந்த இடத்தில் இந்த பொருள்கள் கொடுத்து விட்டு உடனே நீ உன் இருப்பிடத்துக்கு சென்று ஓய்வு எடுத்து கொள் என்று அன்பாக கூறினார்.

உடனே குமார் அந்த வாகனத்தில் ஏறினான். வண்டியில் ஏறிய‌உடன் குமார் சற்று திகைத்தான் காரணம் அந்த வண்டியின்‌ ஓட்டுனர் ஒரு பாக்கிஸ்தானி என்பதால்.

இருவரும் பொருள்களை கொடுக்க வேண்டிய‌ இடத்தில் கொடுத்தனர்.
இறுதியாக சில பொருள்கள் மட்டுமே இருந்தது. உடனே குமார் எனக்கு உடல் சரியில்லை நான் சொல்லும் இடத்தில் என்னை விட்டுவிடுவாய என்று கேட்டன் .

உடனே பாக்கிஸ்தானி இந்த பொருள்களை நான் கொடுத்து விடுகிறேன்.என்று அவன் சொன்ன இடத்தில் அவனை இறக்கிவிட்டான்.
உடனே பாக்கிஸ்தானி அன்பாக நீ சென்று ஓய்வு எடு. நான் பார்த்து கொள்கிறேன் என்று பாக்கிஸ்தானி சென்றுவிட்டான்.

குமார்‌‌ சிறிது தூரம் நடந்து சென்று உணர்ந்தான் நான் இறங்க சொன்ன இடம் தவறு என்று.இருந்தாலும் நடந்து சென்றான். நண்பகல் மணி 12
ஆகியது வெயில் அதிகம் ஆகியது.

குமாரால் நடக்க முடியவில்லை குடிப்பதர்க்கு தண்ணீரும் இல்லை. 
சாலையோரம் கையசைத்து உதவி கேட்டான் ஆனால் யாரும் வாகனத்தை நிறுத்தவில்லை.

சிறிது தூரம் நடந்தான் அவன் அருகில் ஒரு வாகனம் வந்து நின்றது.அந்த வாகனத்தில் இருந்தவரோ ஒர் அரபி முதலில் இருவரும் மரியாதை செய்தனர். உடனே நீ எங்கு செல்கிறாய் என்று அரபி குமாரிடம் கேட்க குமார்‌ தன் இருப்பிட விலசத்தை கூறினான்.உடனே அரபி நான் உன்னை அங்கு விடுகிறேன் என்று சொல்லி அவனை‌ வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

அதிக ‌தூரம் சென்றதும் அரபி குமார்ரிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என்று கேட்டார் உடனே குமார் எனக்கு உடல்நிலை சற்று சரியில்லை என கூறினான்.

உடனே ஒரு hotel முன் வண்டியை நிறுத்தி குமாரை சாப்பிட அழைத்தார் அந்த அரபி உடனே‌ குமார் சரி நான்‌ வருகிறேன் என‌கூறி இருவரும் சாப்பிட‌சென்றனர்.

சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது குமார் அரபியிடம் ஏன் எனக்கு உதவ முன்வந்தீர்கள் என‌ கேட்டான் அதற்க்கு அரபி சிரித்து கொண்டு எல்லாம் ஒரு அன்பு தான் என‌கூறி இருவரும் சிரித்த முகத்துடன் சாப்பிட்டனார்.

அதன் பின் குமாரை‌‌ அவனது இருப்பிடத்தில் விட்டு நீ சென்று நல்ல ஓய்வு எடு என கூறிவிட்டு அந்த அரபி சிரித்த முகத்துடன் விடைபெற்றார்.

குமாரும் தன்‌ இருப்பிடத்திற்கு சென்று நன்றாக மகிழ்ச்சியாக ஒய்வு எடுத்தான்.

பொருள்:-
மற்றாவர்கள் மேல் அன்பாக இருங்கள் அப்பொழுது தான் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

அன்பே எல்லாம்...
                                               தொடரும்........



Post a Comment

2 Comments