Translate

earth-பூமி-கண்டங்களின் சிறப்பு:-

பூமி-பாகம்-10 அண்டார்டிகா:-

    பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு மிக அதிக குளிர் கண்டம் ஆகும்.பூமியின் தென் முனையில் இருப்பதால் சூரிய வெப்பம் குறைந்த அளவே வந்து சேர்கிறது.அனைத்து பகுதிகளும் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.
பரப்பளவு-14,000,000km2
மக்கள் தொகை-1,000 முதல் 5,000 பருவகாலத்தில் மட்டும்.
இங்கு பெரும்பாலும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.
இது பூமியின் தென் முனையில் இருப்பதாலும் பனிக்கட்டிகள் முற்றிலும் சூழ்ந்திருப்பதால் எந்த ஒரு நாடும் உரிமை கொண்டாடவில்லை.ஆனால் தற்பொழுது சில அறிய கனிமங்கள் இருப்பதால் சில நாடுகள் சில பகுதிகளை உரிமை கொண்டாடுகின்றன.
அண்டார்டிக்கா செல்வத்துக்கு விசா தேவை இல்லை ஆனால் சில நாடுகளின் அனுமதி வேண்டும்.
மேலும் இங்கு சுற்றுலா தளங்கள் இல்லாததால் யாரும் செல்ல விரும்புவதும் இல்லை.
அண்டார்டிகாவில் penguins,seals,whales,சில கடற்பறவைகளும் உள்ளன.
சில நாடுகள் இங்கு உள்ள பனிக்கட்டிகளை குடிநீர் ஆதாரமாக எடுத்து செல்ல முயற்சி செய்து வருகின்றனர்.
இங்கு உள்ள ஆராய்ச்சியாளர்கள் வசதிக்காக 20சிறிய விமான ஒடுதளங்கள் உள்ளன.தற்பொழுது இங்கு உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகிறது. மனிதர்கள் வாழ ஏற்ற இடமாக அண்டார்டிகா கண்டம் இல்லை.
மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் இங்கு வேற்றுகிரக வாசிகள் வந்து செல்வதாக கூறுகின்றனர்.
     கண்டங்களின் சிறப்பு முடிந்தது.
                                        தொடரும்......

Post a Comment

3 Comments