தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் வளைகுடாவில் கிழக்கே அமைந்துள்ள ஒற்றுமை மற்றும் இயற்க்கை சூழல் மிகுந்த நாடு வியட்நாம் மேலும் ஆங்கில எழுத்து s வடிவில் இந்த நாடு உள்ளது.
தலைநகர்-ஹனோய்.
மொழி. -வியட்நாமிய மொழி.
அரசு. -சோசலிசக் குடியரசு.
பரப்பளவு. -3,31,689கிமீ2.
மக்கள் தொகை-85,239,035.
நாணயம். - டொங்.
அழைப்புக்குறி- 84.
வியட்நாம் மக்கள் விடுதலை-சுதந்திரம்-மகிழ்ச்சி என்பதை குறிக்கோளாக வைத்து உள்ளனர்.
வியட்நாம் சிறப்புகள்:-
1.வியட்நாமின் வடக்கு முனையில் இருந்து தெற்க்கு முனை வரை மொத்தம் 392 ஆறுகள் உள்ளன.
2.உலகில் முதன் முதலில் விமான பணிபெண்களுக்கு 2+bikini உடைகளை ஆடையாக்கி சுற்றுலா பயணிகளை கவர்ந்த நிறுவனம் இங்கு தான் உள்ளது.(நிறுவனத்தின் பெயர்-vietjetair).
3.உலகயே வியக்கவைக்கும் சபா விவசாயம் என்னும் முறை வியட்நாம்மில் உள்ளது.
4.வியட்நாமியர்கள் கார்களை காட்டிலும் போக்குவரத்துக்கு மோட்டார் சைக்கில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
5.வியட்நாமில் உயிருடன் இருக்கும் பாம்பை மதுபான பாட்டிலுக்குள் அடைத்து அந்த மதுபானத்தை அருந்துவார்கள்.(snake wine) இந்த மதுபானம் உடலுக்கு மிகவும் நல்லதாக சொல்லபடுகிறது.
6.வியட்நாமில் நாய்,பன்றியின்வால் பகுதி உணவு வகைகள் மிகவும் பிரபலமாக உள்ளது.
7.வியட்நாமில் உள்ள மிக முக்கிய சுற்றுலாதளமான ஷாலாங் கடல் பகுதியாகும்.(சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தது)
8.உலகின் மிக பெரிய இயற்கையாக அமைந்த சுண்ணாம்பு குகை இங்கு உள்ளது.(சாண்டோம் குகை) 5கிமீநீளம்.
9.வியட்நாம் சாலையோர உணவுகளில் சிக்கன் நூடுல்ஸ் சூப் இங்கு உள்ள உள்ளுர் வாசிகளால் பெரும் அளவில் சுவைக்கப் படுகிறது.
10. 3,143 மீட்டர் உயரம் கொண்ட பேன்ஷிப்பான் மலை உச்சியே வியட்நாமின் உயரமான மலை பகுதியாகும்.இங்கு அதிகமான பூக்கும் தாவரங்கள்,சிறிய அளவிளான வன உயிரினங்கள்,பல பழங்குடி மக்களும் இருப்பதால் வியட்நாமின் பாதுகாப்பு தேசிய பூங்காவாக உள்ளது.
இதுவே வியட்நாமின் மிக முக்கிய சிறப்பு ஆகும்.
வியட்நாம் மதங்கள்:-
இங்கு பெரும்பாலன மக்கள் எந்த ஒரு மதங்களையும் சாரமல் தனித்துறமாக வாழ்கின்றனர்.
வியட்நாம் பொருளாதாரம்:-
வியட்நாம் சிறிய நாடாக இருந்தாலும் அதன் பொருளாதாரம் நாளுக்கு நாள் அதிக வளர்ச்சி பெற்று சிறந்து விளங்குகிறது.முக்கிய பொருளதாரமாக விவசாயம், சுற்றுலா துறை உள்ளது.
வியட்நாம் இராணுவம்:-
உலகிலேயே பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை ஒட ஒட விரட்டிய புகழ் வியட்நாம் இராணுவம் மக்கள் ஒற்றுமையே காரணமாகும்.சுமார் 58000 அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்று குவித்து அமெரிக்காவை விரட்டியது.
இராண்டாம் உலகபோரில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் மக்கள் ஒற்றுமையால் முன்னேறியது.
வியட்நாமின் தந்தையாக அந்நாட்டின் தலைவர் ஃகொசிமின் என்பவர் ஆவார்.
வியட்நாம் சுற்றுலா:-
தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நாடுகளின் பட்டியலில் உள்ளது.குடும்ப சுற்றுலா தனிமனித சுற்றுலா செல்வதற்க்கு ஏற்ற நாடாக உள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு,முக்கியத்தும் அளிக்கப்படுகிறது.பெண்கள் பாதுகாப்பில் தனிகவனம் எடுக்க படுகிறது.
இறுதி:-
வியட்நாம் சிறப்பாக செயல்பட முக்கிய காரணமாக மக்கள் ஒற்றுமை,சிறந்த கலச்சாரம், பாதுகாப்பு,தனித்துவமான கொள்கை,என்பதே
வியட்நாம் தென்கிழக்கு ஆசியாவின் ஒற்றுமை உள்ள நாடு.
வேறு நாட்டுடன் தொடரும்..........
தொடரும்..........
1 Comments
Super say about malasiya
ReplyDelete