ஆம்! இந்த பூமியில் இன்று வரை நிறைய மர்மங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் அதிகம் அனைவரும் அறிந்தது பெர்முடா முக்கோணம் .
அதை போலவே பூமியின் மற்றொறு
பகுதியில் அமைதியாக பல உயிர்பலிகளை வாங்கிய இந்த கடல் பகுதிதான் டிராகன் முக்கோண பகுதி.
எங்கு உள்ளது டிராகன் முக்கோணம்:-
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து தெற்கு பகுதியில் 100கிமீ
தொலைவில் அமைந்து உள்ள மியாக்கி என்ற தீீீவு.இங்கே தான் அமைந்து உள்ளது இந்த டிராகன் முக்கோண பகுதி.
மா-நோ-உமி என்று ஜப்பானிய மொழியில் அழைப்படுகிறது.அதாவது devil sea பிசாசு கடல் என்று அழைக்கப் படுகிறது.
எப்போது வெளிவந்தது டிராகன் முக்கோணம்:-
1950களில் ஜப்பானை சேர்ந்த இராணுவ கப்பல்கள் இந்த வழியாக சென்ற போது தான் இந்த மர்மம் வெளிவந்தது.
1953 ம் வருடம் 700 பேர் பயணம் செய்த இரண்டு இராணுவ கப்பல்கள் இந்த பகுதியில் சென்ற போது அடையாளம் கூட இல்லாமல் காணமல் போயின.
காணாமல் கப்பல் 700 பேர் எங்கே என்ன நடந்தது என அறிய ஜப்பான் அரசு 33 பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவை அனுப்பிவைத்தது.
ஆனால் சென்றவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை அவர்களும் அடையாளம் இல்லாமல் காணாமல் போயினர்.
இந்த நிகழ்வுகளுக்கு பிறகு ஜப்பான் அரசு உடனடியாக அந்த பகுதியை தடை செய்தது.
விஞ்ஞானிகள் கூறுவது என்ன:-
டிராகன் முக்கோணம் பெர்முடா முக்கோணத்திற்கு நேரக இருப்பதாலும். அதிக கடல்சீற்றங்கள் இருப்பதாலும் இது போன்று கப்பல்கள் காணமல் போகின்றன.
மக்கள் கூறுவது என்ன:-
இந்த கடல் பகுதியிக்கு அருகில் உள்ள தீவுகளில் வசிக்கும் மக்கள் கூறுவது திடிரென வித்தியாசமான சத்தங்கள் கேட்பதாகவும். இந்த பகுதியில் டிராகன்கள் வாழ்ந்ததாக தங்கள் முன்னோர்கள் கூறியதாகவும் மேலும் சில சமயங்களில் கடல்களின் நடுவே தீவுகள் தோன்றி மறைவதாகவும்.
அப்படி தோன்றும் தீவுகளின் போது கடல் சீற்றங்கள் அதிகம் இருப்பதாகவும் அபாயகரமான சத்தங்கள் கேட்பதாகவும் கூறுகின்றன.
இறுதி:-
இன்று வரை பெர்முடா முக்கோணம் போலவே இந்த டிராகன் முக்கோண பகுதியும் விடைதெரியாமல் இருக்கிறது.
ஜப்பான் அரசு இதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது.
இன்னும் இந்த பூமியில் உள்ள நிறைய மர்மமான இடங்களை பார்போம்.
தொடரும்........
0 Comments