Translate

பணக்காரன்

யார்‌ பணக்காரன்:-

கணினி உலகின் அரசனாகவும் உலகின் முதல் பணக்காரனாக இருந்த பில்கேட்ஸ் வாழ்க்கையில் நடந்த ஒரு கதை.
பில்கேட்ஸ் ஒரு முறை இந்தியா வந்த போது பில்கேட்ஸை பார்த்து ஒருவர் கேட்கிறார்.

உங்களை விட பணக்காரர் வேறு யாராவது இருக்கிறாரா? என்று பில்கேட்ஸிடம் கேட்டார். அதற்கு பில்கேட்ஸ் ஆம்! ஒருவர் இருக்கிறார்.
என்று கூறினார்.

யார் அந்த ஒருவர் என்று கேட்க பில்கேட்ஸ் கூறியது:

பல வருடங்களுக்கு முன் நான் வேலை இருந்து  பணிநீக்கம் செய்யப்பட்டேன்.அப்போது நியூயார்க் விமான நிலையம் சென்றேன்.

அங்கிருந்த ஒரு கடையில் நாளிதழ்களின் தலைப்புகளை படித்து கொண்டு இருந்தேன்.நாளிதழ் ஒன்றை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்.ஆனால் என்னிடம் சில்லறை நாணயம் இல்லை எனவே அதை விடுத்தேன்.

அப்போது!.....
ஒரு கருப்பின சிறுவன் என்னை அழைத்து அந்த நாளிதழ் பிரதி ஒன்றை கொடுத்தான். என்னிடம் சில்லறை இல்லை என கூறினேன்.

அதற்கு அந்த சிறுவன் பரவாயில்லை இலவசமாக குடுக்கிறேன் என்றான்.பில்கேட்ஸும் உடனே சரி என‌பெற்று கொண்டார்.

பிறகு மூன்று மாதம் கழித்து மறுமடியும் அதே சிறுவன் நாளிதழை இலவசமாக கொடுத்தான்.

நான் வாங்க மறுத்துவிட்டேன்.
அதற்கு அந்த சிறுவன் பரவாயில்லை வாங்குங்கள் இன்று எனக்கு கிடைத்த லாபத்தில் இருந்து தருகிறேன் என்று சொல்லி குடுத்தான்.

20வருடங்கள் கழிந்தன நான் பணக்காரன் ஆகிவிட்டேன்...

அந்த சிறுவனை மிகவும் ஆவலாக தேடினேன்.ஒன்றரை மாத தேடுதலுக்கு பின் அவனை கண்டுபிடித்து விட்டேன்.

நான்‌ அந்த சிறுவனிடம் என்னை தெரிகிறதா என்று கேட்டேன்?

அதற்கு அந்த இளைஞன் ஆம் தெரிகிறது நீங்கள் புகழ்வாய்ந்த பில்கேட்ஸ் என்று கூறினான்.

உடனே பில்கேட்ஸ் அவனிடம் பல வருடங்களுக்கு முன் இரண்டு முறை எனக்கு இலவசமாக நாள்ழிதள்களை வழங்கினாய்.

தற்போது நீ என்ன விரும்புகிறாயோ அதை உனக்கு தர நான் விரும்புகிறேன் என்றார் பில்கேட்ஸ்.

அதற்கு அந்த இளைஞன் உங்களால் அதற்கு ஈடுசெய்ய முடியாது என்று கூறினான்.

ஏன்?என்று பில்கேட்ஸ் கேட்டதற்கு!

அந்த இளைஞன் ‌கூறியாது நான் ஏழையாக இருந்தபோது கொடுத்தேன் ஆனால் நீங்கள் பணக்காரன் ஆன பின்பே எனக்கு கொடுக்க வருகிறீர்கள்...என்றான்.

ஆகவே நீங்கள் எவ்வாறு அதை சரிக்கட்ட முடியும் என்றான்...

அன்றே‌உணர்ந்தேன் என்னை விட அந்த கருப்பின இளைஞனே பணக்காரன் என்று கூறினார்.
கருத்து:-
கொடுப்பதற்கு நீ பணக்காரனாகவோ இல்லை பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது.

உன்னிடம் இருப்பதில் எதை குடுத்தாலும் நீயும் பணக்காரனே.

உன்னிடம் என்ன இருக்கிறதோ அதை கொடுத்து மகிழ்ச்சி பெறு.இந்த உலகில் யாரும் ஏழை பணக்காரன் இல்லை.

கொடுத்து மகிழ்ச்சி பெறு.....இந்த நாள் இனிமையாக தொடரட்டும்.

                                               தொடரும்........


Post a Comment

1 Comments