மனிதனின் வாழ்க்கையில் வெற்றி தோல்வி எல்லாம் வரும்.ஆனால் சிலர் மட்டுமே தோற்று மீண்டு வருபவர்கள். அவர்கள் மட்டும் எப்படி வருகிறார்கள் என்று பாருங்கள்.
தோல்வி!எது தோல்வி?
வாழ்க்கை தோல்வி என்று ஒருநாளும் கூறாதீர்கள்.வாழ்க்கையில் தோக்குறது முக்கியம் இல்லை.
ஒருநாளும் உன் தோல்விக்கு அடுத்தவர்களை குற்றம் சொல்லாதே.உன் இலக்கை அடையும் போது நீ தோற்பாய்.தோல்வி ஒன்றும் தவறு இல்லை.உன் தோல்வியை மற்றவர்கள் சிரிப்பார்கள்.
அதை பற்றி கவலை படாதே ஏனெனில் உன்னை பார்த்து சிரிப்பவர்கள் ஒன்றும் வெற்றி அடைந்தவர்கள் இல்லை.
மாவீரன் நெப்போலியன் கூறுகிறார்:-
வீரர்களே தோல்வி நம் வாழ்க்கையில் நிரந்தரமானது இல்லை. தோல்வி என்ற ஒன்று நம் வாழ்க்கையில் இல்லை என்றால் வெற்றி ஏது?
ஆம் வெற்றியின் முதல் படி தோல்வி.
நாம் தொடர்ந்து தோல்வி அடைகிறோம் என்றால் நம்முடைய வெற்றி அருகில் உள்ளது என்று நினைத்து கொள்ளுங்கள்.
விடாமுயற்சி:-
தோல்வி அடைந்தவுடன் நாம் செய்யும் தவறு நான் தோற்று விட்டேன் எனக்கு இது வேண்டாம் என்று கூறுவது.ஆம் நீங்கள் ஒரு முயற்சி செய்து தோல்வி அடைந்து விட்டு எனக்கு இது வேண்டாம் என்று செல்கிறாயோ அப்போதுதான் நீ தோல்வி அடைகிறாய்.
உங்களை யாரவது முட்டாள் தோல்வி அடைந்தவன் என்று கூறுகிறார்கள் கவலை படாதே ஏனெனில் நீ உன் வெற்றியை நெருங்குகிறாய் என்று அர்த்தம்.
ஆம்,உன் தோல்வியை பார்த்து சிரித்தவர்கள் உன்னை பார்துது நீ வெற்றி அடைந்து விட்டாய் என்று கூற நீ செய்ய வேண்டியது விடாமுயற்சி மட்டுமே.
இந்த உலகில் வெற்றியாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே.
வெற்றி:-
ஆம் வெற்றி உண்மையில் மகிழ்ச்சி ஆனால் நீ வெற்றி அடைய வேண்டும் என்றால் முதலில் தோல்வி வேண்டும்.உன் தோல்வி மட்டுமே உன் வாழ்க்கையை வெற்றிடைய செய்யும்.
வெற்றி அடைய படிப்பு திறமை எதும் வேண்டாம் விடாமுயற்சி நான் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் முதலில் வேண்டும்.
உங்களுக்கு தெரியுமா
தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பரட் ஐன்ஸ்டைன்,இருவரும் உடல் குறை பாடு உள்ளவர்கள்.தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை தோல்வி அடைந்த போது அவருடன் இருந்தவர் இது வேண்டாம் நாம் தோல்வி அடைகிறோம் என்று கூறினார் உடனே தாமஸ் ஆல்வா எடிசன் கூறிய வார்த்தை நாம் அடுத்த முறையும் தோல்வி அடைவோம் என்று கூறினார்.ஆனால் இறுதியாக பல முறை தோல்வி அடைந்து 1000 கண்டுபிடிப்புகளை கண்டறிந்தார்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உன்னால் படிக்க முடியாது உனக்கு மூளை வளர்ச்சி சரியில்லை என்று சமூகத்தில் இருந்த ஒதுக்கப்பட்டவர்
ஆனால் அவர் தனக்கு பிடித்தை தானே படித்தார் தன்னுடைய ஆராய்ச்சிகளை கேட்க்க யாரும் ஆதரிக்கவில்லை என்றாலும் இறுதிவரை விடா முயற்சி செய்து இன்று பல அறிவியல் விதிகள் அவர் கண்டறிந்தது. நோபல் பரிசும் வாங்கினார்.
ஆம் இவர்கள் தங்கள் வாழ்க்கையில்
வெற்றி பெற முதல் காரணம் தோல்வி இராண்டாவது விடா முயற்சி இறுதியாக வெற்றி.
இனி ஒருநாளும் எண்ணாதீர்கள் நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று.மாறாக எனது வெற்றிக்கு அருகில் நான் வந்து விட்டேன் என்று நிணைத்துகொள்.
தோல்வி என்று கூறதே...வெற்றியின் படி என்று கூறி உன் வாழ்க்கையை தொடங்கு.
தொடரும்........
0 Comments